தெற்கிலோ ஒற்றுமை வடக்கிலோ குத்துவெட்டு


கட்சி என்பதற்கு அப்பால் நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கோ­ம்.

அந்தக் கோ­ம் அவரின் தனிப்பட்டதன்று. மாறாகத் தென்பகுதிப் புத்திஜீவிகள் மற்றும் முதன்மையான அரசியல் கட்சிகளின் கோ­ம் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகளை வென்றதற்காக எவரும் ஊழல் செய்ய அனுமதிக்க முடியாது.

ஆதலால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கு இனி ஆட்சியில் இடமில்லை என்பது தென்பகுதி புத்திஜீவிகளினதும் முக்கியமான அரசியல் பிரமுகர்களினதும் கருத்து.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக யஹல உறுமய உள்ளிட்ட கட்சிகளும் ஒன்று சேர்ந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டுக் கட்சியை உருவாக்கியுள்ளனர்.

நாட்டின் தென்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுமே இருபெரும் பிரதான கட்சிகள். மற்றையவை உதிரிக் கட்சிகள் என்ற நிலைமையில், தேர்தல் என்றால் இரு பிரதான கட்சிகளே கோலோச்சும்.

ஜே.வி.பி என்ற கட்சி மூன்றாவது பலமாக உருவெடுத்த போதிலும் அதனை ஒருவாறாக விமல் வீரவன்ச உடைத்துவிட்டார். இந்நிலையில் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முடிவுறுத்த வேண்டும் என்பதற்காக தென் பகுதிக் கட்சிகள் ஒன்றிணைந்து  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உருவாக்கி, மகிந்த ராஜபக்வை ஜனாதிபதியாக்கி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முற்றுப்பெறச் செய்தனர்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த மகிந்த ராஜபக்­ தனது குடும்ப ஆட்சியை நாட்டில் நிலை நிறுத்த முற்பட்ட போது, நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோ­த்தோடு மகிந்தவுக்குத் தெரியாமல் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் மகிந்தவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து வீழ்த்தினர்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தேவைப்பட்ட மகிந்த இப்போது தேவையில்லை. இனிமேல் நல்லாட்சி செய்யக் கூடியவர்களே ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியும் ஒன்றிணைந்து மைத்திரியின் ஆதரவுடன் ஊழலை, குடும்ப ஆட்சியை, பொருத்தமற்ற அரசியல்வாதிகளைத் தூக்கி எறிந்து நல்லாட்சி என்ற பெயரோடு ஆட்சியைக் கைப்பற்ற தீட்டிய திட்டம் அரங்கேறி விட்டது.

அங்கு அப்படி என்றால், இங்கு வடக்குக் கிழக்கில் ஒரே குழப்பம். ஒற்றுமையாக ஓரணியில் நின்று தமிழர் பலத்தை நிரூபிக்க எவருமில்லை. பதவி ஆசையில் தமிழ்த் தலைமைகள் பேயாட்டம் ஆடுகின்றன. தங்களுக்கும் தங்களுக்குத் தேவையானவர்களுக்குமே ஆசனம் என்ற நிலைமை ஏற்பட்ட போது எல்லாம் கந்தறுந்து போய் விட்டது.

ஓ! இதனால்தான் தந்தை செல்வநாயகம், தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாரோ என்று எண்ணத் தோன்றும்.

ஆம், ஒரு காலத்தில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து தமிழர்கள் தப்பிப்பிழைப்பது எப்படி? என்று ஏங்கிய காலம் போய், இன்று தமிழர்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து எவ்வாறு தங்களைக் காப்பாற்றப் போகின்றனர் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. ஆதலால்தான் தந்தை சொன்னார் கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila