வெள்ளை வான் இல்லை என்கிறார் ரணில்! எனில் கடத்தப்பட்டவர்கள் எங்கே?

கடந்த ஆட்சியில் வெள்ளை வான்களின் அட்டகாசம் அதிகரித்திருந்தன என்றும், ஆனால் தாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து இன்று வரை வெள்ளை வான் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது உண்மையாயினும்.
கடந்த காலத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் வெள்ளை வான்களைக் கொண்டு தமிழ் இளைஞர், யுவதிகள், வர்த்தகர்கள் என்று பலரை கடத்தி சென்றமையை இவர் இப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும், தமது ஆட்சிக்கு எதிரானவர்களையும், தம்மை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களையும் அடக்க இந்த வெள்ளை வான்களை பயன்படுத்தியிருந்தனர்.
ஒரு காலத்தில் வெள்ளைவானில் கடத்தப்பட்டாலே அவரின் உயிர் பிரிந்ததாகவே நினைத்த வரலாறுகளும் உண்டு.
இவ்வாறு வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் பலர் இன்று வரை என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் பெற்றோர்கள் இன்று கண்ணீரும் கம்பலையுமாக அலைகின்றார்கள்.
இந்த வெள்ளைவானின் அட்டகாசம் தாங்க முடியாமல் தங்கள் உயிர்களை காத்துக்கொள்ள தமது உறவுகளை விட்டு வெளிநாடுகளுக்குள் தஞ்சம் புகுந்த இளைஞர்கள் ஏராளம்.
இப்பொழுது ஆட்சி மாறியதன் பின்னர் வெள்ளை வான் கலாச்சாரம் இல்லை என்றும், அந்த வெள்ளை வான்கள் இப்பொழுது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார் பிரதமர்.
அப்படியாயின் வெள்ளை வான் கடத்தல் என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனில், மைத்திரியின் மாற்றமும், ரணிலுக்கான பிரதமர் பதவியும் கிடைக்க காரணம் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளே.
ஆக, வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் பற்றியதான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் இதுவரை அதாவது இந்த 7மாதங்களில் ஏதாவது முன்னெடுத்திருக்கின்றதா என மக்கள் வினாவுகின்றார்கள்
ஏனெனில் இந்த வெள்ளை வானில் அதிகம் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்காகவே எல்லாவற்றையும் சொல்லும் இவர்கள் ஐக்கிய நாடுகள் விசாரணையில் இருந்து இலங்கையையும், இராணுவத்தினரையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை அண்மைக் காலச் செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து இராணுவத்தை பாதுகாக்க துடிக்கும் இவர்கள், எப்படி இராணுவத்தினரைக்கொண்டு கடத்தப்பட்டவர்களின் விடுதலைக்கு உதவுவார்கள்.
வரும் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை சுபீகரிக்கவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila