‘புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்திருக்கவில்லை. புலிகளுடன் எவ்வித கூட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடையாது. புலிகளின் கொள்கைகளையும் ஏற்கவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழர் உரிமைக்காகப் பாடுபடுகின்றது. அதற்காக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. புலிகள் மீண்டும் ஒன்று திரள்வார்கள். இலங்கைளில் மீண்டும் பயங்கரவாதம் புலி வருகை என்பது உண்மைக்கு புறம்பானது அப்படி ஒரு நிலை வந்தாலும் மக்கள் அவர்களை ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்.’
இது இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இறக்குமதி செய்யப்பட்ட சட்டத்தரணி ம.அ. சுமந்திரன் அவர்கள் ஊடகமொன்றிக்கு வெளியிட்ட கருத்தாகும். இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரா? அது மட்டுமல்ல இவர் ஒரு தமிழனா? எனவும் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமை மாவை சேனாதிராஜா மீதும் சந்தேகத்தை ஏற்ப்படுத்துகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதறிக்கிடந்த தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணைந்து விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். அப்படி இருக்க கூட்டமைப்பிற்கு புலிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர்களின் கொள்கையை ஏற்கவில்லை எனவும் அப்பட்டமான பொய்யை துரோகத்தனமாக வெளியிட்டு உள்ளார். ஆட்சியாளர்களும் மற்றும் அடக்கு முறையாளர்களும் புலிகளை பயங்கரவாதிகள் என நாமம் சூட்டும் போது சுமந்திரனும் அதே வார்த்தைகளை பாவிக்கும் போது அவர் யார் பக்கம் சாய்கிறார் என்பதை எம்மால் புரிந்து கொள்ளமுடிகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஊடுருவிய ஆட்சியாளர்களின் ஒரு கையாளின் செயற்பாடு என்பதில் சந்தேகம் கொள்ளமுடியுமா? உயிர் அர்ப்பணிப்புக்களாலும் நினைத்துப்பார்க்க முடியாத தியாகங்களாளும் என விடுதலைக்குப் பெரும் விலை கொடுத்த விடுதலை புலிகளை கீழ்மைப்படுத்திய இந்த சுமந்திரன் போன்றவர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என கூற என்ன அருகதை இருக்கின்றது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணசபை சுமந்திரனின் துரோகத்தனத்திற்கு உச்சந்தலையில் செருப்படி கொடுத்துள்ளது. வடக்கு மாகாணசபை முன்னால் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவி செய்யவும் பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கி வேலையை ஆரம்பித்துள்ளது. இது வடக்குமாகாணசபை விடுதலைப்புலிகளுக்கு செய்யும் கௌரவம் ஆகும். அவர்கள் பயங்கரவாதிகள் என்ற சுமந்திரனின் கூற்றை நிந்தனை செய்து புலிகள் மக்கள் நலன் சார்ந்த இயக்கப்போராளிகள் என கௌரவிககப்பட்டுள்ளனர். இது வடமாகாணசபை சுமந்திரனுக்கு வழங்கிய செருப்படி ஆகும்.
ஏற்கனவே இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்கள் மனித உரிமைகள் தொடர்பான ஜ.நா.மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்படுவது செப்ரம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்ட போது சுமந்திரன் அதை தான் வரவேற்ப்பதாக அறிவித்தார். அதே நேரம் இதனை வடமாகாணசபை இனப்படுகொலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றி சுமந்திரனுக்கு ஏற்க்கனவே செருப்படி கொடுத்திருந்தது.
வடமாகாணசபை சுமந்திரனின் துரோகத்தனத்திற்கு உரிய நேரத்தில் எதிர் நடவடிக்கை எடுத்து தனது கடமையை நிறைவேற்றியது. எனவே தமிழ் மக்களும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அதாவது எதிர்வரும் பொது தேர்தலில் சுமந்திரனுக்கு ஒரு விருப்பு வாக்குகூட விழக்கூடாது. துரோகிகள் அரசியலில் இருந்து முற்றாக தூக்கி எறியப்பட வேண்டும் காட்டிக்கொடுக்கும் சுமந்திரன் போன்றவர்களை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி நமக்கு நாமே அழிவை தேடக்கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை துரோகிகளைக் களைந்து சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கே உண்டு.