தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த சமயம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐநா செயலர் பான்கிமூனின் மருமகனான மேஜர் சித்தார்த் சாட்டர்ஜிக்கு அவரது மாமனார் பான்கிமூன் உயர் பதவி வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கிழக்காசியாவுக்கான ஒருங்கிணைப்பாளராக மேஜர் சட்டர்ஜியை ஐநா செயலர் பான்கிமூன் நியமித்து அதற்கான ஆவணத்திலும் சென்ற வாரம் கையெழுத்திட்டுள்ளார் என இன்டர்சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்ட ரீதியான தகுதி இல்லாமல் குறித்த பதவியை சட்டர்ஜிக்கு பான் கீ மூன் எவ்வாறு வழங்கினார் என்பது தொடர்பில் இனர் சிட்டி பிரஸ் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேஜர் சட்டர்ஜி இந்திய அமைதிகாக்கும் படையில் இருந்தபோது, அவரது செயற்பாடுகள் தொடர்பாகவும், பான்கிமூனின் மருமகன் தொடர்பான கேள்விகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபன் டூர்க் எதையும் கூற மறுத்துவிட்டார்.
மேலும், மேஜர் சட்டர்ஜி போரில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உடலங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளதாகவும், சட்டர்ஜியின் இச்செயற்பாடு ஐக்கியநாடுகள் சாசனத்தின் விதியை மீறும் செயலாகும் எனவும் இன்டர்சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தோற்றடித்தமைக்கு மேஜர் சட்டர்ஜி பாராட்டுத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.