சர்வதேச விசாரணை ஒரு கற்பனை நாடகம்-2


தமிழ் மகன் 2:முடிந்தது என்றால் முடிந்தது. முடிய வில்லை என்றால் முடியவில்லை. 

தமிழ் மகன் 1:வடக்கு மாகாண சபையில் சர்வ தேச விசாரணையை வலியுறுத்திக் கொண்டு வந்த தீர்மானம்?

தமிழ் மகன்2:ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே நமக்குச் சொந்தமடா...
 
(கோரஸ்) தகிட... தகிட... தகிட...
வேண்டும்... வேண்டும்... சர்வதேச விசாரணை வேண்டும்... வேண்டும்... வேண்டும்... சர்வதேச விசா ரணை வேண்டும்...  

இரா.ச:மந்திரா! என்ன கோசம் அங்கே?

மந்திரா:சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையயழுத்துப் போராட்டமாம்.
இரா.ச:அட, நாசமறுப்பு!

மந்திரா:ஐயா! உங்கட கடைசி ஆசை நிறை வேறிற்று. அமிர் மாதிரி வரவேணும் எண்டு நினைச் சியள். அது மாதிரி ஆக்கிப் போட்டன். இனி எந்தப் போராட்டம் என்றாலும் எங்களுக்கு என்ன? 

இரா.ச:மந்திரா! அப்படிச் சொல்லாதே. அடுத்த தேர்தலிலும் நான் வெல்லவேணும். 

மந்திரா:அப்ப நாங்கள் எப்ப உங்கட இடத்துக்கு வாறது? இப்படியே தேர்தலில் போட்டியிடப்போறி யளோ!

இரா.ச:மந்திரா! எனக்குப் பயமாய் இருக்கு. சனம் எல்லாம் கையயழுத்துப் போடுவதில கடும் ஆர்வம் காட்டுகினம். எங்கட எதிர்காலம்...? 

மந்திரா:இதுக்கேன் ஐயா! பயப்படுகிறியள். உங்களுக்குத் தெரியாத சிங்க வாகனமோ! காளி ஆத்தாவோ! கனவோ! ஒன்றை எடுத்து விடுங்களேன். 

இரா.ச:ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்திய போது நான் சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்தனான். அப்பவே எனக்கு எதிர்க்கட் சித் தலைவர் பதவி தரலாம் என்று ரணில் என்ர காதில சொன்னவர். சொன்னமாதிரி அந்தாள் செய்து போட்டுது. 

மந்திரா:நீங்கள் சிங்கக் கொடி தூக்கியதை பலர் விமர்சித்தாலும் திருகோணமலையில் இருக் கின்ற  காளியை முன்னிறுத்தி சிங்கக் கொடி-சிங்க வாகனம் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி தப் பித்துக் கொண்டீர்கள். எங்கட சனங்களும் நீங்கள் சிங்கக் கொடி ஏற்றியபோது-ரணிலோடு கூட்டு வைத்தபோது ஓரளவுக்கென்றாலும் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எங்களுடைய தமிழ்ச் சனங்கள் நம்பினால் நம்பினதுதான்.   

இரா.ச:ஹ... ஹ... மந்திரா நான் சிங்கக் கொடி பிடித்ததை சொல்லிக் காட்டுகிறீரா அல்லது குத்திக் காட்டுகிறீரா? எதுவாக இருந்தாலும் உன்னுடைய ஞாபக சக்தி யாருக்கு வரும்? எனினும் கையயழுத்துப் போராட்டம்...பயமாக இருக்கு.

மந்திரா:எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. நீங்கள் தாளத்தை மாற்றிப்போடுங்கள்.   

இரா.ச:சர்வதேச விசாரணை அவசியம்... உள்ளூர் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் சர்வதேச விசாரணையை வலி யுறுத்துகி றோம்.

மந்திரா:சபாஷ்... இது போதும் ஐயா! அடுத்து தேர்தலிலும் நாங்கள்தான்... 
(நீங்கள் இதுவரை நேரமும் பார்த்து மகிழ்ந்தது சர்வதேச விசாரணை நாடகம்) 
பார்வையாளர்கள்:நல்ல நாடகம் இரா.ச நடிப்பு பிரமாதம். மந்திரன் மிகத் திறம். இனியும் நாங்கள் ஹவுஸுக்குத்தான் புள்ளடி போடுவம். ஏனென்றால் அவர்கள் தானே எங்களை ஏமாற்றுவினம். அப்ப தானே ஏமாறுகிற எங்கட தலைவிதி நடந்தாகும். நல்லம் நல்லம்.     
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila