இவற்றில் ராஜபக்ஷேவும் அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் தமக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். குறிப்பாக கொழும்புவில் ரூ.9,000 கோடி மதிப்பில் கட்டப்ட்டு வரும் செயற்கை துறைமுக திட்டத்தில் ராஜபக்ஷேவின் குடும்பத்தினர் ஈடுபட்டிரப்பதாக பேசிய அவர் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றார். வளர்ச்சிப் பணிகளுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த சமயத்தில் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதவியுடன் ராணுவ புரட்சி செய்ய ராஜபக்ஷே முயற்சி செய்த குற்றச்சாட்டில் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், துறைமுகம் அமைக்கும் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் புகாரும் அவருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. இதனிடையே ராஜபக்ஷே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கருணா உள்ளிட்ட 25 பேர் முன்னாள் அமைச்சர்கள் சிறிசேனாவை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்ததால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
ரூ.9,000 கோடி ஊழல் புகாரில் சிக்கினார் மகிந்த! - அதிபர் மைத்திபால சிறிசேனா பகிரங்கமாக குற்றச்சாட்டு !
Related Post:
Add Comments