ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியிடப் படும் சந்தர்ப்பங்களில் சனல் 4 ஊடகத்தின் ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்பும் மேலோ ங்கியிருக்கும் என்பதை நீதிக்கான தேடல் என்ற தலைப்பில் வெளியிட்ட காணொலி மூலம் மீண்டு மொருமுறை உலகிற்கு உணர்த்தியுள்;ளார் கெலம் மக்ரே.
2009 ஆம் ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதியுடன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்த போதிலும் போர்க்காலத்தில் அரங்கேறிய தமிழினத்திற்கு எதிரான அநீதிகளை நினைவு படுத்தி சர்வதேச நாடுகளின் தலைவர்களின் மனச்சாட்சி களை தட்டியெழுப்பி வருகி றார் கெலம் மக்ரே.
இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து நிச்சயமாக சர்வதேச விசா ரணை ஒன்று இலங்கை அரசிற்கு எதிராக நடத்தப் பட்டே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து சர்வ தேச நாடுகள் நழுவ முடியாது என்பதையும் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக காணொலி மூலம் வெளிப் படுத்தியுள்ளார் கெலம் மக்ரே.
தமிழினப் படுகொலை குறித்து சர்வதேச பக்கச் சார் பற்ற விசாரணை முன்னெடுக் கப்பட வேண்டும்.
உள்ளக விசாரணை உண்மையை வெளிக்கொண ராது என்பதால் சர்வதேச விசாரணைப் பொறிமுறை யொன்றே ஏற்புடையதாக அமையும் என்பதை வலியுறு த்தி தமிழர் தாயமெங்கும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் இக்காணொ லியை வெளியிட்டுள்ளார் கெலம் மக்ரே.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்தும் இறுதிக்கட்டப் போரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் தமிழர் களைப்போர் தவிர்ப்பு வலயத் திற்குள் வைத்து கொத்துக் குண்டுகளைப் பொழிந்து கொன்றொழித்த கொடுமை களையும் காணொலியாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் கெலம் மக்ரே.
ஊலக நாடுகளின் பிரதிநிதி கள் கண்ணீர்விட்டழுத சம்ப வங்களுக்கும் போர்க்குற்றங் கள், மனித உரிமைமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை களை முன்னெடுக்க வேண் டும், காணாமற் போனவர்கள் கண்டறியப்படவேண்டும், இராணுவத்திடம் சரணடைந்த வர்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக் கைகளை முன்னிலைப் படுத்தி தாயகத்திலும் தமிழ கத்திலும் உலக நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதற்கும் முக்கிய காரணியாக செயற் பட்டவர் கெலம் மக்ரே.
லண்டனைத் தலைமையக மாகக்கொண்டு இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தில் ஆவணப்படங் களையும் காணொலிகளையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர் கெலம் மக்ரே உள்ளிட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் இலங்கை க்கு வருகை தந்த சந்தர்ப்பத் தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பலபுறக் கணிப்புக்களையும் மறைமுக அச்சுறுத்தல்களையும் விடுத்தி ருந்தும் அதற்கெல்லாம் சற்றும் அடிபணியாது உண் மைகளை வெளிப்படுத்துவ தில்; கெலம் மக்ரே உறுதி யுடன் செயற்பட்டிருந்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 30 ஆவது கூட்டத் தொடர் நாளை 14 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக வுள்ள நிலையில் இலங்கை யில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த அறிக்கை எதிர்வரும் 16 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையின் பிரதி யொன்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் கையளிக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இலங்கை அரசிற்கு பெரும் அச்சுறுத்திலாக விளங் கும் சனல் 4 ஊடகம் அதன் இயக்குநர் கெலம் மக்ரேயால் தயாரிக்கப்பட்ட காணொலியை வெளியிட்டு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சைப் பதபதைக்க வைக்கும் போரக் காட்சிகளை காணொலியில் உள்ளடக்கி யுள்ள கெலம் மக்ரே, இல ங்கை: நீதிக்கானதேடல் என்று அதற்கு தலைப்பிட்டு நீதிக்கான தேடலில் தமிழர் களுடன் தான் இணைந்துள் ளதை மீண்டுமொருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
மகிந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய அட்டூழியங்களை எதிர்த்து நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை யோடு தமிழர்கள் காத்திருந்த சந்தர்ப்பத்தில் மகிந்தவின் மாற்றத்தோடு தன் நிலைப் பாட்டையும் மாற்றிக்கொண்டது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது என்பதை வெளிப்படு த்தும் முகமாகவும் சர்வதேச விசாரணையே வேண்டும். உள்நாட்டு விசாரணைக்கு உடன்பட முடியாது என்பதை யும் வெளிப்படுத்தும் முகமாக கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சர்வதேச விசா ரணையை வலியுறுத்தி நடை பயணமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின்; தலைவர் இரா.சம்பந்த னுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை சிங்களதேசம் விட்டுக்கொடுத்தால் தமிழர் சர்வதேச விசாரணைக் கோரிக்கையைவிட்டு விடு வார்கள் என்பது புதிய அரசின் எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் தமிழினத்தின் தலைவர் ஒருவரே. அவர் நிச்சயமாக சிங்கக் கொடியை ரணிலுடன் தாங்கிப் பிடித்த சம்பந்தன் இல்லை என்பதை யும் அக்கட்சியில் அங்கம் வகிக்கும் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் வெளிப் படுத்தியுள்ளனர்.
வடக்கு மாகாண சபையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனும் இலங்கை அரசால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டு ள்ள உள்ளக விசாரணையை வெளிப்படையாக எதிர்த்துள்ள னர், புறக்கணித்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சிவஞா னம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் போன்ற வர்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப் பட்டு சர்வதேச விசாரணையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை உறுதிபடக்கூற முடியும்.
அதேவேளை புதிதாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளஅக்கட்சியின் உறுப்பினர்களும் சர்வதேச விசாரணையைக் கோரு வார்கள் என்று நம்பலாம். போரின் கொடூரங்களைத் தாங்கியவர்களுக்கு சம்பந்த ரின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெரிதாக தெரிய வாய்ப் பிருக்க முடியாது.
எனவே, சனல் 4 ஊடகவி யலாளர் கெலம் மக்ரே தயாரித்து வெளியிட்டுள்ள இலங்கை: நீதிக்கான தேடல் காணொலியை ஆதாரமாக வும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழர்கள் மேற்கொள்ளும் போராட் டங்களைக் கருத்திற்கொண் டும் நீதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபை முன் வரவேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மகிந்த ஆட்சியில் தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரும் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை விரைவாக எடுக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் மாநாட் டின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.