2009ல் புலிகளை யுத்தம் மூலம் வெற்றி கண்ட ராணுவத்தினர் , பின்னர் விடுதலைப் புலிகள் போன்று சில முகாம்களை நடத்தி வந்துள்ளார்கள். இவை அனைத்துமே போலியானவை. எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை கைது செய்ய. இவர்கள் புதுப் போராட்டம் ஒன்றை புலிகள் ஆரம்பிக்க உள்ளதாக ரகசிய தகவலை ராம் , நகுலன் மற்றும் முன் நாள் புலிகள் ஊடாக கசிய விட்டார்கள். இதனூடாக முள்ளிவாய்க்காலுக்குள் சிக்காத பல விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் இதனூடாக கைது செய்தது. சில தமிழ் இளைஞர்களை வைத்தே இந்த முகாமை அமைத்து செயல்பட்டு வந்தது ராணுவப் புலனாய்வுப் பிரிவு. இதனை நிர்வகித்தவர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகும். கிரித்தல என்னும் இடத்தில் குறித்த முகாம் அமைந்துள்ளது.
இதனை சோதனையிட நேற்றைய தினம்(10) இலங்கை பொலிஸ் பிரிவின் புலனாய்வு முயன்றுள்ளது. ஆனால் குறித்த முகாமுக்குள் செல்ல அங்கே இருந்த ராணுவ அதிகாரிகள் அனுமதி வழங்கவே இல்லை. நீதிமன்ற உத்தரவு இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளார்கள். ஆனால் ராணுவத்தினரோ அதற்கும் மிஞ்சிய அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார்கள். அவர்கள் கையில் எடுத்த அதிகாரம் தேசிய பாதுகாப்பு ஆகும். இம் முகாமை சோதனை இட்டால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறியே ராணுவத்தினர் நிராகரித்துள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அதிர்வின் புலனாய்வு நிருபர் மேலும் தெரிவித்துள்ளார். இங்கே இன்னும் சில புலிகள் உறுப்பினர்கள் ரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க , ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்கவே பொலிஸ் புலனாய்வு அங்கே சென்றதாகவும். ஆனால் ராணுவத்தினர் அதி பதட்டமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கிரித்தல இராணுவ முகாமுக்குள் தேடுதல் நடத்த குற்றப்புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கை தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.