இலங்கை நிராகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பித்தோம்!


ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் விசா­ரணை அறிக்­கையை வர­வேற்­கிறேன். ஏற்­க­னவே கூறப்­பட்ட விட­யங் கள் உறு­தி­யா­கி­யுள்­ளன. உண்­மை யை மட்­டுமே கூறி வரு­கிறோம். ஆனால், இலங்கை அர­சாங்கம் எமது கருத்­துக்­களை நிரா­க­ரிக்கும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நாம் வலு­வான ஆதா­ரங்­க­ளுடன் அத னை நிரூ­பித்து வரு­கிறோம்.

ஆதா­ரங்கள் தொடர்ச்­சி­யாக வெளி­யாகி வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில், எவ்­வா­றான விசா­ர­ணை­களை விரும்­பு­கின்­றீர்கள் என குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் கேட்­பது நியா ­ய­மில்லை என 'செனல் 4' ஊட­க­வி­ய­லாளர் கெலம் மெக்ரே தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யினால் இலங்கை தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட விசா­ரணை அறிக்கை குறித்து கருத்து வெளி­யிட்ட போது அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

கடந்த அர­சாங்­கத்தை விடவும் பல விட­யங்­களில் புதிய அர­சாங்கம் மாறு­பட்­டுள்ள போதிலும், தமிழர் நிலை­மைகள் விவ­கா­ரத்தில் இரண்டு அர­சாங்­கங்­க­ளுக்­கு­மி­டையில் பாரிய வித்­தி­யாசம் கிடை­யாது.

மைத்­திரி – ரணில் அர­சாங்கம் ஊடக சுதந்­தி­ரத்தை உறுதி செய்­யவும், ஊழல் மோச­டி­களை இல்­லா­தொ­ழிக்­கவும் சில நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. எனினும் தமி­ழர்­களை பொறுத்­த­மட்டில் மாற்­றங்கள் எதுவும் நிக­ழ­வில்லை.

காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள், வடக்கு கிழக்கில் இரா­ணுவ பிர­சன்னம் போன்ற விட­யங்­களில் மாற்­றத்தை காண முடி­ய­வில்லை. தமிழ் மக்கள் மீது யுத்­தக்­குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட சில அதி­கா­ரி­க­ளுக்கு மைத்­திரி அர­சாங்கம் பதவி உயர்­வு­களை வழங்­கி­யுள்­ளது. அர­சாங்கம் உல­கிற்கு ஒன்­றையும் தமிழ் சமூ­கத்­திற்கு மற்­றொன்­றையும் கூறி வரு­கின்­றமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் உரை­யாற்­றிய வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, குற்றச் செயல்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டுவர் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். மறு­பு­றத்தில் படை­யினர் இரத்தம் சிந்தி வென்­றெ­டுத்த நாட்டை பிள­வ­டையச் செய்ய அனு­ம­தியோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்தார்.

'ஹைபிரைட்' நீதி­மன்றில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் வெளி­நாட்டு நீத­வான்­க­ளா­கவே இருக்க வேண்டும். முழு அளவில் சுயா­தீ­ன­மாக விசா­ர­ணைக்­குழு செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது.

நான் சர்­வ­தேச அர­சியல் நடாத்தும் நோக்கில் ஆவ­ணப்­ப­டங்­களை வெளி­யி­ட­வில்லை. ஊட­க­வி­ய­லாளர் என்ற ரீதியில் சரி­யான நேரத்தில் சரி­யான விட­யங்­களை வெளிக்­கொ­ண­ரவே முயற்­சிக்­கிறேன். எமது திரைப்­ப­டங்கள் மேற்­கு­லக நாடு­களின் அர­சியல் அல்­லது பொரு­ளா­தார நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலானதல்ல.

இலங்கை மீது மேற்குலக நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆவணப்படங்களை தயாரிக்கவில்லை. நம்பகமான பக்கச்சார்பற்ற சர்வதேச நீதிவான்களைக் கொண்டு யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila