அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணையை கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவு பேரணியை நடத்துகிறது.
மேலும் சிலர் சர்வதேச தீர்ப்பாயத்தை கோருகின்றனர்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் உள்நாட்டு விசாரணைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைமையில் இருக்கிறது.
இது தொடர்பில் தாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்படி சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன், உள்நாட்டு விசாரணைகளுக்கு இணக்கம் தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.