போர் குற்றங்களை மூடிமறைக்கும் திட்டத்தை அம்பலப்படுத்தினார் - சம்பிக்க.!

சிறிலங்கா அரசுக்கு எதிராக கடந்த பத்து வருடங்களாக சுமத்தப்பட்டு வரும் போர் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர் பான குற்றச்சாட்டுக்களை முற்றாக நீக்குவதற்கான ஐந்த அம்சத் திட்டமொ ன்றை மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங் கத்தின் பங்காளிக் கட்சியொன்று முன்மொழிந்துள்ளது.

ஜெனீவா தீர்மானத்திலிருந்து சிறி லங்கா படையினரையும், அரசையும் விடுவித்துக் கொள்வதற்காக எதிர் வரும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தில் பிரேரணையொன்றை முன் வைத்து நிறைவேற்றிக்கொள்ளப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் அறிவித்து இரண்டு நாட்களுக்குள், அரசின் பங்காளிக் கட்சிகளின் ஒன்றான சிங்களபௌத்த கடும்போக்குவாதக் கட்சியான ஜாதிக்க ஹெல உறுமய இந்த யோசனையை முன்வைத்திருக்கின்றது.

மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி களில் ஒன்றான ஜாதிக்க ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலா ளர் சந்திப்பு கொழும்பில் இன்று பகல் நடைபெற்றது.

இதில் அந்தக் கட்சியன் செயலாளரான அமைச்சர் கருணாரத்னபரணவித் தாரனவும் கலந்து கொண்டிருந்த நிலையில், அரசாங்கத்தின் பாரிய அபிவி ருத்தி திட்டங்களுக்கான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, போர் குற்றங்களில் இருந்து சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினரையும், அரசா ங்கத்தையும் மீட்பதற்கான தனது ஐந்து அம்சத் திட்டத்தை முன்வைத்தார்.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளி ட்ட அரச படையினர், படைப் புலனாய்வாளர்கள், துணை ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.

 யுத்தத்தின் போது குற்றங்கள் நிகழ்ந்ததை ஒப்புக்கொண்ட ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அவை “யுத்தத்தின் இலக்கை அடைவதற்காக இடம்பெற்ற குற்றங்கள்” என்று அடையாளப்படுத்தினார்.

இது குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர் சம்பிக்க.... “ சட்டமா அதிபர் திணைக் களம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சட்டத்துறை நிபுணர்களை இணைத் துக்கொண்டு தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடு தலைப் புலி உறுப்பினர்கள்,

இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், அரச படையினருக்கு உத விய தமிழ் துணை ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்களை வகைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டஅரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதன்போது போரின் போது போர் இலக்கைஅடைவதற்கான பயணத்தின் போது நடைபெற்ற குற்றங்கள் என்ன?, தனிப்படடதேவைகளுக்காக மேற் கொள்ளப்பட்ட குற்றங்கள் என்ன?

அதாவது கப்பம் பெறுவதற்கும், அச்சுறுத்துவதற்கும், அப்படி இல்லாவிட்டால் வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இழைத்த குற்றங்கள் என்ன என்பதை வகைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

யுத்தத்தின் இலக்கைநிறைவேற்றிக்கொள்வதற்காக செயற்பட்டதால் அரச படையினர் மற்றும் துணை ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால்அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுமையாக விடுதலை செய்ய வேண் டும்.

அதேபோல் சிறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்அதாவது அவர்களது யுத்த இலக்கை அடைவதற்கான பயணத்தில் நடைபெற்ற குற்றங் களுக்காக சிறைவாசம் அனுபவித்தால் அவர்களும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டும்.

தற்போது சிறைச்சாலைகளில் 60 க்கும் குறைவானவர்களே உள்ளனர். ஆனால் 12ஆயிரத்து 600 பேர் அதாவது சிறையிலுள்ளவர்களை விட அதிக குற்றங்களை இழைத்தவர்கள்வெளியே இருக்கின்றனர்.

அதனால் பத்து வருடங்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் இவர் களையும், அரச படையினருடன் விடுதலை செய்ய நடவடிக்கைஎடுக்க வேண் டும்” என்றார்.

சிறுவர் கடத்தல்கள், படுகொலைகள், மற்றும் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை தனிப்பட்ட தேவைகளுக்காகமேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் என் றும் அமைச்சர் சம்பிக்க அடையாளப்படுத்தினார்.

“தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக யாராவது பிள்ளை களை கடத்திச் சென்றிருந்தால், படுகொலைகளைசெய்திருந்தால் அல்லது பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருந்தால்அவர்களுக்கு எதிராக துரிதமாக வழக்குகளைத் தொடர்ந்து அந்தப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

இவற்றை தொடர்ந்து கொண்டுசெல்வதன் ஊடாக எந்த பலனும் இல்லை” என்றார் சம்பிக்க. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வ தேசமனித உரிமை அமைப்புக்கள் மாத்திரமன்றி சிறிலங்கா அரசினால் நிறு வப்பட்ட ஜெனீவாத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவை யான மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்படட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான குழு, காணாமல்போனோர் அலு வலகம் என்பவற்றின் அறிக்கைகளில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தையும், அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தி யுத்தகாலத்திலும், அதற்குப் பின்னரும் ஆட் கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும்சித்திரவதைகளில் சிறிலங்கா இராணு வத்தினர் உள்ளிட்ட அரச படையினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளனர்.

எனினும் இக் குற்றங்கள் எந்த நோக்கத்திற்காகமேற்கொள்ளப்பட்டன என் பதை தேசிய அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெளிவுபடுத்தவில்லை.

எவ்வாறாயினும் ஆட் கடத்தல்கள், சித்திரவதைகள்மற்றும் படுகொலைகள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அரச படை அதிகாரிகரிகளுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொணடு வரும் இர கசிய பொலிஸ் அதிகாரிகளை அழைத்திருந்த சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அரச படையினர் உள்ளிட்ட அனை வருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதன் பின்னர், யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்கள் குறித்து கதைப்பதை முழமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

“இவ்வாறான பொது மன்னிப்பொன்றைஅதாவது தேசிய பொது மன்னிப்பை வழங்கி அதன் ஊடாக ஒட்டுமொத்த நாடும் இணைந்து செயற்படவேண்டிய காலம் எழுந்துள்ளது.

ஆளும் கட்சிகள், எதிர் கட்சிகள், தமிழ் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரப்பினர் உட்பட அனைத்து தரப்பினரும் இப் பிரச்சி னைக்கான தீர்வுக்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்து மீண்டும் இப் பிரச் சினைகள் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.

அதாவது யுத்தக் காலத்தில்இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர் பில் சிங்கள அமைப்புக்களோ, தமிழ மற்றும் முஸ்லீம் அமைப்புக்களோ பேசு வதை நிறுத்தி முழுமையாக அவற்றைமறந்துவிட வேண்டும்.

இதன் ஊடாக எமது எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்ள முடியும்.அவ்வாறு இல்லாது இப்பிரச்சனைகளை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்தினால் பொது மன்னிப்பு வழங்கி போர்க் கைதிகளை விடுதலை செய்தன் பலன் இல்லாமல் போய்விடும்". என சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளாா்.  

- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு -
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila