வடமாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அவை முதல்வர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்துக்குச் சென்றிருப்பதாகத் தெரிகின்றது.
முதல்வரை கட்டுப்படுத்த முடியாத கூட்டமைப்பின் தலைமை (சாம், சுமா, மாவை) இப்போது சி.வி.கே.யை தமது நோக்கங்களுக்குப் பயன்படுத்த முற்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.
நெருக்கடிகளைக் கொடுத்து முதலமைச்சரை வெளியேற்றிவிட்டு சி.வி.கே.யை முதலமைச்சராக்கும் ரகசியத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாகவும் மாகாண சபை வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
சர்வதேச விசாரணையைக் கோரும் பிரேரணையை முதலமைச்சர் கடந்த வாரம் கொண்டுவந்த போது சி.வி.கே. அதற்கு அனுமதிக்க முடியாது என முதலில் அடித்துக் கூறிவிட்டாராம். நிகழ்ச்சி நிரலில் அதற்கு இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரியவந்திருக்கின்றது.
இருந்தபோதிலும், முதல்வரும், மற்றொரு அமைச்சரும் கடுமையாகப் போராடிய பின்னரே அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாம். அதன்பின்னர் அதற்கு எதிராக அவர்களால் வெளிப்படையாகச் செயற்பட முடியவில்லை.
அமெரிக்க உதவி வெளிவிவகாரச் செயலர் நிஷாவுடனான சந்திப்பையடுத்தே இவ்வாறான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு முதலமைச்சர் தீர்மானித்தாராம். முன்னரே நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்தால் அதற்கு எதிராக தலைமை செயற்படலாம் என்பதால்தான் இறுதி வரையில் விஷயம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம்.
சி.வி.கே.யின் முதலமைச்சர் கனவு நனவாகுமா?