வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அறிவிக்காமலே ஒரு ஆவணத்தை ஐ.நா மனித உரிமைச் சபைக்கு அனுப்பிவிட்டார் என்று கூறப்படுகிறது. வட கிழக்கு மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்ற நீதியான மற்றும் நியாயமான கோரிக்கை ஒன்றையே அவர் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்று மக்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடும் ஆத்திரமடைந்த மாவை சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகிய மூவரும் , உடனே விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி மந்திர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
இதில் கலந்து கொண்ட மாவை மிகவும் கோபமாக காணப்பட்டதாகவும் , வடக்கு மாகாண சபையைக் கலைக்க உடனே மைத்திரியின் உதவியை நாடினால் நல்லது என்றும் கூட கூறியுள்ளார். இதனூடாக விக்கினேஸ்வரனை வீட்டுக்கு அனுப்ப இவர்கள் முயற்ச்சி செய்து வருகிறார்கள் என்பது தற்போது தெளிவாகிறது. இதேவேளை சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை சமீபத்தில் சம்பந்தருக்கு திருகோணமலையில் விழா எடுக்கப்பட்டது. இதனை ஸ்ரீதரன் அவர்கள் புறக்கணித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.