
இணையத்தின் ஊடாக இந்த ஆவணப்படம் முதலில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.பின்னர் தமிழ், சிங்களம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை உள்ளடங்கியதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் இன்னல்களை சர்வதேச சமூகம் செவிமடுக்க வேண்டுமென்ற நோக்கில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டு இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.நோபயர் ஸோன் ஆவணப்படத்தை தயாரித்த கலம் மக்ரேவினால் தி சேர்ச் போ ஜஸ்டிஸ் என்ற ஆவணப்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை தலைமையகத்தில் காண்பிக்கப்படவுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது