ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்ற பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையையும்,அவர்களது கடந்த காலங்களையும் கருத்தில்கொள்ளும் போது ஓகஸ்ட் 17 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்கள் இலங்கை வாக்காளர்களே என்பது தெளிவாகியுள்ளது.
புதிய அமைச்சரவையில் ஹர்சா டி சில்வாவிற்கும், எரான் விக்கிரமரட்ணவிற்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் அதன் மூலம் நிதி விவகாரங்கள் குறித்த அவர்களது அறிவை, திறனை முழமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என இலங்கையின் வர்த்தக சமூகத்தினர் எதிர்பார்த்தனர்.
எனினும் ஹர்சாவிற்கு அவரிற்கு அறிமுகம் இல்லாத பிரதிவெளிவிவகார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எரான் விக்கிரமரட்ண கொள்கை வகுப்பில் மிகவும் திறமை வாய்ந்தவர் என்கின்ற போதிலும் அந்த திறமையை முற்றாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவர்களை தவிர பிரதியமைச்சர்கள் மற்றும் இலாக்க அற்ற அமைச்சர்கள் பட்டியலை உற்றுநோக்கும் போது அது தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் போல தோன்றுவது தவிர்க்கமுடியாததாகவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் கூட என்ன நடந்தது என தெரியாத நிலையிலுள்ளனர்.
சுற்றுலாத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிமல்லன்சாவின் வீட்டில் போதைப்பொருட்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் 2011 இல் விசேட அதிரடிப்படையினர் அவரது வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையயை மேற்கொண்டிருந்தனர்.அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் இதேபோன்ற தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
எனினும் இந்த தேடுதல் நடவடிக்கை முடிவிற்கு வந்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஅவரது வீட்டிற்கு சென்று அவரை கட்டித்தழுவியிருந்தார், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் கைவிடப்பட்டது.
தற்போதைய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவ்வேளை மகிந்தராஜபக்சவின் அந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தார். ஜனாதிபதியின் தலையீடு நாட்டில் சட்டத்தின் ஆட்சி முற்றாக இல்லாமல் போயுள்ளதை புலப்படுத்தியுள்ளதாக அவர் அவ்வேளை தெரிவித்திருந்தார்.
பிரியங்க ஜயரட்ண கடந்த வருடம் யூன் மாதம் பொலிஸ்நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஓருவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்திருந்தார். அவரிற்கு பொருத்தமான சட்டம் ஓழங்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
2013 ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற 10 மில்லியன் ருபாய் கொள்ளையுடன் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் தொடர்புபட்டிருந்தார்.ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக இடம்பெற்ற விசாரகைளின்போது இவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
தற்போது குற்றப்புலானய்வு மற்றும் விசேட பொலிஸ்பிரிவு போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் அவரிற்கு உள்ளதால் அவர் விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் வாய்ப்புள்ளது.காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் குறித்து நீதிமன்றில் பொய்சாட்சியமளித்த அருணிகா பெர்ணாண்டோ பிரதி உள்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
சிறிசேன அரசாங்கத்தின் 100 நாள் ஆட்சியின் போது பாராளுமன்றத்திற்குள் உறங்கிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடு தொடர்பாக நான்கு மணித்தியாலங்களிற்கு மேல் விசாரணைக்குட்படுத்தப்பட்ட எக்கனாயக்க காணி விவகாரங்களிற்கான பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்ட சுமேதாஜயசேனவிற்கும் வனவளங்கள்பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பார்க்கர் சூதாட்ட விடுதிகளை ஆதரித்த லக்ஸ்மன்யாப்பா அபயவர்த்தனவிற்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் அவ்வேளை இலஞ்சப்பணம் பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சியினால் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்.
பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரதியமைச்சர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.சில நியமனங்கள் எனக்கு அதிருப்தியை அளித்துள்ளன . எனக்கு அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை, ஆனால் அவர்களிற்கு எதிரான போராட்டத்தை நான்இடைநிறுத்த மாட்டேன் என அவா தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்