இலங்கையில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கோரியும், சர்வதேச விசாரணையை ஐ.நா.மனித உரிமை ஆணையம் கொண்டு வர வலியுறுத்த வேண்டும் என்றும், விசாரணைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா.
2011ல் இலங்கை மீது பொருளாதார தடை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது, பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி 2013ல் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள்…
• இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்.
• இலங்கைக்கு அமெரிக்கா சார்பாக செயற்படுமாயின் இந்தியா தலையிட்டு தடுக்க வேண்டும்.
• ஏனைய நாடுகளுடன் இணைந்து இந்தியாவே தீர்மானம் ஒன்றை கொண்டுவரவேண்டும்.
• இலங்கை நாடு எதிரி நாடு. அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி :-தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகமுதல்வருக்கு மாணவர்கள் மனு!
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.