ஆளுநருக்கு 23, முதலமைச்சரிற்கோ 10!

reginold Cooray and Vigneswaranவடமாகாணசபையில் அதிகாரம் மிக்க தரப்பாகத் தொடர்ந்தும் ஆளுநரே இருந்து வருகின்றார். ஆளுநர் தனது அலுவலகத்திற்கென வடமாகாணசபையின் 23 வரையிலான சொகுசு வாகனங்களை சுவீகரித்து வைத்துள்ளார். எனினும் வடமாகாண முதலமைச்சரிடமோ வெறுமனே பத்து வாகனங்களே உள்ளதாக தெரியவருகின்றது.

வுடமாகாணசபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தமக்கு அலுவலக பணிகளிற்கு வாகனங்களை ஒதுக்கி தரக்கோரிவருகின்ற நிலையில் கூடியளவில் வாகனங்களை ஆளுநர் தரப்பே பயன்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
முன்னைய ஆளுநர் சந்திரசிறி மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை நிர்வாகத்திற்கு வாகனங்களை ஒதுக்கி வழங்க விருப்பங்கொண்டிருக்கவில்லை. தனது வசமிருந்த சொகுசு வாகனங்களைக் கையளிக்காது விட்டோடும் வரை வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila