பிரித்தானியாவில் யாழ்ப்பாண இளைஞர் தற்கொலை: வலுவடையும் சந்தேகம்

பிரித்தானியாவின் Ealing மாகாணத்தில் அமைந்துள்ள King George's Playing Field பகுதியில் இருந்து யாழ்ப்பண இளைஞர் ஒருவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Lady Margaret சாலையில் அமைந்துள்ள இந்த பூங்காவில் இளவயது வாலிபர் ஒருவரது உடல் இறந்த நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் அந்த பூங்காவை சுற்றி வளைத்துள்ளனர்.
இதனையடுத்து அந்த உடலை கைப்பற்றிய பொலிஸ், முதற்கட்ட சோதனைக்கு பின்னர், அந்த இளைஞர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இறந்த அந்த நபர் குறித்த கூடுதல் தகவல்களை திரட்டி வருவதாக தெரிவித்துள்ள பொலிசார், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட  அந்த இளைஞரின் உயிரிழப்பு குறித்து முழுமையான சோதனைக்கு பின்னரே அறிவிக்க முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உயிரிழந்துள்ள வாலிபர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் எனவும் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்யதுள்ளதும் தெரிய வந்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila