இலங்கையில் இடதுசாரித்துவம் மரணித்ததா? விக்கிரமபாகு கருணாரத்னவுக்கும் புலிகள் பயங்கரவாதிகள் ஆயினர்

இலங்கையில் இடதுசாரித்துவம் மரணித்ததா? விக்கிரமபாகு கருணாரத்னவுக்கும் புலிகள் பயங்கரவாதிகள் ஆயினர்:

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்கும்போது இராணுவத்தை சிலர் தவறாக வழிநடத்தினர்: விக்கிரமபாகு கருணாரத்ன: குளோபல் தமிழ் செய்தியாளர்

போர்க்குற்றங்களுக்குப் மகிந்தவே பொறுப்பு

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான மகிந்த ராஜபக்ச அதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்று நவசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா அறிக்கை முன்னிலைப்படுத்தி இலங்கையில்  இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் பாசிச குழுக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச தலைமயிலான பாசிச குழுவினர் யுத்த காலத்தில் போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

இராணுவத்தினர் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்த அவர் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்கும்போது சிலர் இராணுவத்தை தவறாக வழிநடத்தியயதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வாதிகாரத்துடன் செயற்பட்ட சிலரின் நடவடிக்கை காரணமாகவே நாட்டுக்காக போராடிய வீரர்கள் சர்வதேசத்தின் முன் குற்றவாளிகளாக நிற்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே புதிய அரசு ஐ.நா அறிக்கைப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி மூவின மக்களுக்கும் உரிமைகளை பகரிந்தளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila