சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?


கந்தப் பெருமான் சிறுவனாக நாவல் மரத்தின் மேல் நிற்கின்றார். அச்சமயம் தெருவால் நடந்து வந்த ஔவைப் பாட்டி நாவல் மரத்தின் கீழ் களைப்பாறச் செல்கிறார்.
நாவல் மரத்தில் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்ட ஔவையார் தம்பி, நா வரண்டு போகிறது நாலைந்து நாவல் கனி பறித்துப் போடு என்றார்.
உடனே சிறுவன், பாட்டி சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்கிறான்.
சிறுவனின் புத்திசாலித்தனத்தை உணர்ந்து கொண்ட ஔவையார் சுட்ட பழம் தா! என்கிறார்.
சிறுவன் நாவற் பழங்களை பறித்து கீழே போடுகின்றான். விழுந்த பழங்களில் மண் ஒட்டி விடுகின்றன. பழங்களை எடுத்த ஔவைப் பாட்டி மண்ணை விலக்கும் பொருட்டு ஊதுகிறார்.
உடனே சிறுவன்; பாட்டி பழம் சுடுகிறதா? என்கிறான்  இந்தக் கதைக்குள் தமிழ் விளையாடுவதைக் காண முடிகிறது.
சிறுவயதில் படித்த இந்தக் கதை இப்போது எதற்கு என்று நீங்கள் யாரும் கேட்டு விடலாம். எல்லாம் கார ணத்தோடுதான்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் பிரதிநிதியாக வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்தில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ வை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.  இதுதான் சுட்ட பழம் சுடாத பழம் என்ற கதை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ வை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றினேன் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியதற்குள்,
சர்வதேச விசாரணை நடந்தால், மகிந்த ராஜபக்ஷ ­ போர்க்குற்றம் புரிந்தது நிரூபணமாகும். எனவே தமி ழினத்தை திட்டமிட்டு அழித்த குற்றத்திற்காக மகிந்த ராஜபக்­ஷ வை சர்வதேசம் மின்சார நாற்காலியில் இருத்தி அவருக்குத் தண்டனை வழங்கியிருக்கும் என்பது மங்கள சமரவீரவின் கருத்து.
இந்நிலையில் அவரை நானும் எனது அரசும் காப் பாற்றி உள்ளோம் என்று அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டதற்குள், இரண்டு பொருள்கள் உள்ளன. அதில் ஒன்று சர்வதேசத்தால் மரண தண்டனை வழங் கப்படக் கூடிய, ஒரு இன அழிப்பு குற்றவாளியை நாம் காப்பாற்றியுள்ளோம் என்பது.
மற்றையது உள்ளக விசாரணையை செய்வதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்படுவர் என்பது.
இங்குதான் இலங்கை அரசின் இனப் பாகுபாடு வெளிப்படுகிறது. ஜெனிவாவில் நின்று கொண்டு மகிந்த ராஜபக்ஷ ­வை மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றினோம் என்று அமைச்சர் மங்கள சமரவீர கூறு வராயின், உள்ளக விசாரணை தமிழர்களுக்கு -  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காது என்பது வெளிப்படையாகிறது.
ஆக, சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று கூறுபவர்கள் தாங்கள் சொன்னதே சரி என்று மார்தட் டாமல் அமைச்சர் மங்கள சமரவீர கூறிய விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறு அவர்கள் மங்கள சமரவீர கூறியதன் கருத்தை உணர்ந்து கொண்டால், உள்ளக மற்றும்  கலப்பு நீதிமன்ற விசாரணைகள் எங்களுக்கு எதுவும் தராது என்பதை உணர முடியும். முக்கிய குற்றவாளியை காப் பாற்றியவர்களிடம் நீதியை எதிர்பார்ப்பது மடமைத் தனம்.’
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila