எனினும் திட்டமிட்ட வகையினில் குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளிற்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்கும் இவர்கள் காணிகள் ஏதுமற்ற உள்ளுர் தமிழ் குடும்பங்களை விரட்டியடிக்க முற்படுவது கொழும்பு அரச உயர்மட்ட பணிப்பே காரணமென சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் நாவற்குழி ஐயனார் கோவிலடி பகுதியில் அரச காணியினுள் தற்காலிக குடிசைகள் அமைத்து 12 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இதற்குரிய தீர்வு கிட்டும்; வரை குறித்த குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு யாழ். மாவட்ட அரச அதிபருக்கும், தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும் ஜ.தே.க சார்பு அமைச்சர் விஜயகலா அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது..