கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார். அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை ஜெனீவாவுக்கு பயணமானார். வடமாகாண சபையில் விடுமுறை பெற்றுக்கொண்டு, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் அனுமதியுடன் இவர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளார். 'இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்' மற்றும் 'இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனஅழிப்பு' என்று, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டு வடமாகாண முதலமைச்சரால் கையொப்பமிடப்பட்ட இரண்டு பிரேரணைகளில் பிரதிகளையும், அனந்தி எடுத்துச் சென்றுள்ளார். அந்த பிரதிகளை, ஐ.நா உறுப்பு நாடுகளிடம் கையளிப்பதற்காகவே அவர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. |
மேலும் இரு கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜெனிவா பயணம்! - அனந்தியும் சென்றார்
Related Post:
Add Comments