பாரதப்போர் இடம்பெறுவதுக்கு அடிப்படையாக அமைந்தது உரிமை விவகாரம் என்றாலும் சூதாட்டமே பாரதப் போருக்கான சபதத்தை தோற்றுவித்தது.
துரியோதனனும் தருமரும் சூதாடியிருந்தால் தரு மருக்கே வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் சூதாட்டத் தில் துரியோதனன் ஈடுபட்டாலும் காயை உருட்டியது சகுனியே.
சகுனியின் விரல் அசைவுகளுக்கேற்ப காய் உருளுகின்ற மாயத்தால் தருமர் அனைத்தையும் இழந் தாராயினும் கெளரவர் சேனை தன் வம்சத்தையே இழந்தது.
சூதாட்டம் நடந்ததன் காரணமாக பாண்டவர் துணையாள் பாஞ்சாலி போர் எனச் சபதம் எடுத்தாள். இது இதிகாசக் கதையாயினும் இதற்குள் நிறைந்த உண்மைகளும் தத்துவங்களும் உள்ளன.
இன்றைய யதார்த்தத்திலும் இவை நடந்து கொள்கிறது. பாத்திரங்களும் நடக்கும் இடங்களும் கருப்பொருள்களுமே வேறுபட்டவை. மாறாக அதர் மத்தின் அக்கிரமத்தை எதிர்க்க தர்மம் போராடிக் கொண்டே இருக்கிறது.
இப்போது எங்கள் வடக்கு மாகாண சபையை பார்த் தீர்களாயின் தமிழர்களுக்கு ஏன்தான் இப்படியயாரு அரசு கிடைத்தது என்று எண்ணத் தோன்றுகிறது. அதர்மவாதிகள் சிலருடன் நீதியரசர் விக்னேஸ்வரன் போராட வேண்டியுள்ளது.
அவரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வெளி யில் இருக்கும் அரசியல்வாதிகள் சிலர், மாகாண சபை உறுப்பினர் சிலரை உசுப்பேத்திவிட அவர்கள் முதலமைச்சரை கேள்வி கேட்பதற்குத் தலைப்படு கின்றனர்.
முதலமைச்சரிடம் கேள்விகேட்பது ஜனநாயகமா யினும் ஒரு எதிர்ப்போடு; காழ்ப்புணர்வோடு; பழிதீர்க் கும் நினைப்போடும் கேள்வி கேட்பது எந்தவகையிலும் நியாயமாகாது.
எங்களின் முதலமைச்சருக்கு முதலில் நாங்கள் மதிப்புக் கொடுக்கவேண்டும். சபையை நடத்துபவர்கள், சட்டங்களை அனுசரிப்பதோடு சபை உறுப்பினர்கள் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும்.
ஓரவஞ்சமாகச் செயற்படுவது, வாக்களித்து சபைக்கு அனுப்பிய மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமா கும். முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரே ரணை கொண்டுவந்தால் அதனை எதிர்த்து தமிழ் மக்கள் கிளர்ந்தெழுவர் என்பதற்காக ஒரு சில உறுப் பினர்களைத் தூண்டிவிட்டு முதலமைச்சருக்கு எதி ராக செயற்படுவதானது, தமிழருக்கு மாகாணசபை யைக் கூட ஒழுங்காக நடத்தமுடியாது என்பதையே சர்வதேசத்துக்கு காட்டிநிற்கும்.
வடக்கு மாகாண சபையின் ஆளும்வர்க்கமே பிரிந்து நின்று வாதப் பிரதிவாதம் நடத்துகிறது எனில் தமிழ் மக்களுக்கு உங்களால் என்ன செய்துவிட முடி யும்?
தேர்தல் காலங்களில் மட்டும் உங்கள் பிரசாரங்கள் பொறிபறக்கின்றன. ஆனால் பதவிகிடைத்தபின் நீங் கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை நீங்களே ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள் என்று உங்களை கேட்பதன் மூலம் வடக்கு மாகாணசபை ஒழுங்காக நடக்கும் என்று நாம் நினைக்கவில்லை.
ஆகவே, அன்பான தமிழ் மக்களே! நீங்கள் ஒரு கணம் சிந்தியுங்கள். வடக்குமாகாண சபையில் ஒரு சிலர் முதல்வருக்கு எதிராக செயற்படுவதும் அவர் களை உள்ளும் புறமும் நிற்பவர்கள் தூண்டு விடுவதும் அதன் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானாக விலகிப் போகச் செய்வதுமான இந்தக் கொடுமைத் தனங்களை - அதைச் செய்பவர்களை நீங்களே அவ தானித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அவதானிப்பு என்றோ ஒருநாள் இவர் களுக்கு தீர்ப்பு எழுத நிச்சயம் உதவும்.