நிதிக்குற்ற விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளவர்கள் குறித்த விபரங்கள் மகிந்தவுக்கு எவ்வாறு முன்கூட்டியே

நிதிக்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளவர்கள் குறித்த விபரங்கள் மகிந்தவுக்கு எவ்வாறு முன்கூட்டியே

 நிதிக்குற்றங்கள் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளவர்கள் குறித்த விபரங்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு முன்கூட்டியே தெரியவருவது குறித்து பலத்தசந்தேகங்கள் எழுந்துள்ளன.

தங்களுடைய திணைக்களத்தில் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஓருவரே முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த விபரங்களை வழங்குவதாக பொலிஸ்திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நிதிக்குற்றங்கள் தொடர்பான விசாரணைபிரிவினால் விசாரிக்கப்படவுள்ள நபர் யார் என்பது தெரியவந்ததும்,முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிச தலைமையிலான சட்டத்தரணிகளுடன். விசாரணையை எதிர்கொள்ளவுள்ள நபரின் பின்னணி, அவர் தெரிவிக்கவுள்ள விடயங்கள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி தீவிரஆலோசனையை மேற்கொள்கின்றார் என முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை விசாhரணையை எதிர்கொள்ளவுள்ள நபர் குறித்து தெரியவந்ததும் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிச அவர்களை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்துவதாகவும், அவர்களிற்காக தான் ஆஜராவதற்கு 2.5 மில்லியனை கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் செயற்பாடுகளை பொலிஸ் மா அதிபர் என்கே இளங்ககூன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார்,சஜின் வாஸ் குணவர்த்தன விசாரணைக்கு அழைக்கப்பட்டவேளை அவரை விசாரித்துவிட்டு விடுமாறு பொலிஸ் மா அதிபர் நிதிக்குற்ற விசாரணை பிரிவினரிற்கு உத்தரவிட்டார் எனினும் அவர்கள் சஜினை கைதுசெய்தது குறித்து அவர் கடும்கோபம் கொண்டிருந்தார்,பொலிஸ் மா அதிபர் முன்னாள் ஜனாதிபதிக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கின்றார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது பதவிக்காலத்தில் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவார் என பொலிஸ்மா அதிபர் கனவுகாண்கிறார்,; நிதிக்குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப்புலாய்வு பிரிவினரிற்கு ஆதரவளிப்பதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் அவர்களிற்கு தடையாகவுள்ளார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila