எதைச் சொல்லி ஒரு விடுதலை இயக்கத்திற்கு தடை போட்டார்களோ.... எதைச் சொல்லி ஒரு இனத்தின் எழுச்சியை ஒடுக்கினார்களோ... எதைச் சொல்லி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு துணை நின்றார்களோ.. எதைச் சொல்லி தமிழகத்தில் உணர்வாளர்களின், இளைஞர்களின் எழுச்சியை மிரட்டினார்களோ... எதைச் சொல்லி இங்கேயும் அங்கேயும் உலகமெங்கும் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தார்களோ.... அந்த ராஜீவ்காந்தி கொலையில் நடந்த புலன்விசாரணையும், ஓட்டைகளையும் ஆதாரங்களோடு தோலுரிக்கும் புத்தகம்.. இன்றும் ஆறா துயரத்துடன் காத்திருக்கிறார் நளினி முருகன்... என்று பதிவிட்டுள்ளார்.இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நளினி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். நளினியின் சுயசரிதை புத்தகத்தை நான் படித்தேன்.அந்த புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. ஏனெனில் அதில் அவ்வளவு கொடுமைகள் அடங்கியுள்ளது.அப்படி சித்ரவதை செய்து இருக்கின்றார்கள். நளினியின் கதையை ஒரு இயக்குநர் திரைப்படமாக எடுத்தால் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூறியுள்ளார். |
எதைச் சொல்லி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு துணை நின்றார்களோ: - ஆறா துயரத்துடன் காத்திருக்கும் நளினி முருகன்
Add Comments