நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணையின் முழுமையான வடிவம்


பல விமர்சனங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும், சர்வதேச த்தினதும் எதிர்ப்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்க பிரேரணை நேற்று வியாழக்கிழமை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

அமெரிக்கா சமர்ப்பித்திருந்த பிரேரணையின் நகல் வரைபைவிட புதிய திருத்தப்பட்ட பிரேரணையில் பல விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்னைய வரைபில் காணப்பட்ட சில பந்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன், 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள 20 விடயங்களும் வருமாறு :-

1.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 27ஆம் அமர்வுகளில் இலங்கையில் நல்லிணக்கத்தையும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களையும் ஏற்படுத்த வேண்டுமெனக் கோரி, மனித உரிமைப் பேரவை ஆணையாளர் ஆற்றிய உரை மற்றும் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை என்பனவற்றை கவனம் கொள்கின்றோம்.

அந்தவகையில் நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25-1 தீர்மானத்துக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை கோருகின்றோம்.

2. உண்மையை கண்டறியும் விடயத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துக்கும் இடையிலான ஈடுபாடு வரவேற்கப்படவேண்டியது.

3. நீதியை அமுல்படுத்துவதில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் விரிவான தேசிய கலந்துரையாடல்களின் ஊடாக இதனைச் செய்ய முடியும். சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வலுவான ஓர் பாதுகாப்புப் பொறிமுறைமை அவசியமானது.

4. நல்லிணக்கம் கடந்தகால பிரச்சினைகள் மீள் இடம்பெறாமல் இருத்தல் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் உள்ளிட்ட விடயங்கள் வரவேற்கப்படவேண்டியவை.

பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைப் பொறிமுறைமை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மூலம் விசாரணைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். இதற்கு சர்வதேச உதவிகளையும் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் தொழில்நுட்ப உதவிகளையும் பெறலாம்.

5. ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்தும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

6. பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளுடன், உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும்.

7. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவவோருக்கு எதிராக தண்டனை விதிக்க உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

8. பாதுகாப்புத் துறைசார் விவகாரங்களில் காத்திரமான மாற்றங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். பாரிய மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் உயர் பதவிகளில் அமர்த்தப்படக்கூடாது.

குறிப்பாக தற்காலிக நீதிப் பொறிமுறைமையில் சர்வதேச மனிதாபிமானசட்டங்களை மீறிய படையதிகாரிகள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளடக்கப்படக்கூடாது.

9. சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தக் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது. பாதுகாப்பு தரப்பினர் அரச அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிப்பவர்கள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.

10. அரசாங்கப்படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. குறிப்பாக சிவியலின் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு முழுமையான அகற்றிக்கொள்ளப்பட வேண்டும். சிவலியன்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்

12. ஊடகவயிலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத, இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியதுடன் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க வேண்டும்.

12. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல் மற்றும் ரத்து செய்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வர­வேற்கப்பட வேண்டியது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட முடியும்.

13. பலவந்த கடத்தல்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட அரசாங்கம் காட்டும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது. காணாமல் போனவர்கள் தொடர்பில் உறவினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்

14. கடந்த காலத்தில் விசாரணை நடத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதி வர­வேற்கப்பட வேண்டியது.

15. மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்கள் அறிக்கைகளையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தனியார் அல்லது பொது நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்து பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

16. அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலமே நாட்டின் அனைத்து சனத்தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும். 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

17. சர்வதேச மனித உரிமை சட்டம் சர்வதேச மனிதாபிமான சட்டம் என்பவை மீறப்படக்கூடாது என இராணுவப் படையின் அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்படவேண்டும்.

அனைத்து வகையிலான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பால் நிலைசார் ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்க இலங்கையை ஊக்கப்படுத்த வேண்டும். பால் நிலை ஒடுக்குமுறை சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

18. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 அமர்வுகளின் போது வாய்மொழி மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைகள் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தபபடுகின்றதா என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 அமர்வுகளின் போது வாய்மொழி மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து 34 அமர்வுகளில் முழு அளவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

19. இலங்கை அரசாங்கம் விசேட ஆணையாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட ஊக்குவிக்கின்றோம். சில பிரதிநிதிகள் நீண்ட காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவேண்டும்.

20. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசேட அறிக்கையாளர்கள் ஆணையாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila