2005ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2006ம் ஆண்டு நொவம்பர் மாதம் வரையில் இடம்பெற்று 7 படுகொலை சம்பவங்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தி அறிக்கைப்படுத்தி இருந்தது.
இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 51 முல்லைத்தீவு மாணவிகள் கொலை செய்யப்பட்டமையானது, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள வான்படையின் தாக்குதலில் இருந்த தப்பிப்பதற்காக குறித்த மாணவிகளை விடுதலைப் புலிகள் முன்னிறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு வான்படையினர் நடத்திய தாக்குதலையும் உதலகம ஆணைக்குழு நியாயப்படுத்தியுள்ளது.
அதேநேரம், மூதூரில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் படுகொலையையும், விடுதலைப் புலிகளே புரிந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புலிகள் இந்த கொலைகளை புரிந்துவிட்டு, பாதுகாப்பு தரப்பினர் மீது பழிசுமத்த முற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 98 வான்படையினர் கொல்லப்பட்டமை உள்ளிட்ட மேலும் நான்கு சம்பவங்கள் தொடர்பிலும், விடுதலைப் புலிகள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளனது.
எனினும் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மாத்திரமே சிங்கள படையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.