ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை இலங்கையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் தென்னாபிரிக்காவில் கடந்த 6, 7 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதுதொடர்பிலான விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு யாழ். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, குறித்த கலந்துரையாடலில் முன்னாள் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம்பிள்ளையும் தனது கருத்துக்களை முன்வைத்தார். அதற்கமைய ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பாக கூறினார். அவருடைய கருத்தின்படி மிகப் பலவீனப்பட்ட தீர்மானம் இது. இத்தீர்மானம் தமிழ் மக்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத் தருமா? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். அத்துடன் எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனின் நிதிக்காக போராடுவதன் மூலம் தான் பெற்றுக்கொள்ள முடியும் என தெளிவாக அவர் கூறியிருந்தார். புலம்பெயர் நாடுகளிலிருந்து தமிழ்ப் பிரதிநிதிகளும் ஈழத்தில் இருந்து பிரதிநிதிகளுமாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டோம். இந்த கலந்துரையாடலில் தென்னாபிரிக்க கேர்பனில் உருவாக்கப்பட்ட பரிந்துரைகள் என்ற அடிப்படையில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தென்னாபிரிக்க அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் ஒரு ஆரம்பகட்ட பரிந்துரையாக நாம் கூறியுள்ளோம். ஒரு விசாரணைப் பொறிமுறையை உருவாக்க இருக்கின்ற நிலையில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு குழுவை ஏற்படுத்தித் தருமாறு தென்னாபிரிக்காவிடம் இலங்கை அர சாங்கம் கேட்டிருக்கின்ற நிலையில் இலங்கை அரசுடனான தொடர்பாடலை தென்னாபிரிக்கா வைத்திருப்பதனாலும் இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் இந்த பேச்சுக்கள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கமைய கடந்த அக்டோபர் 1ஆம் திகதி பொறுப்புக்கூறல், இன நல்லிணக்கம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சு, அமைச்சரவை பேச்சாளர் போன்ற ஒவ்வொருவரும் முரண்பட்ட பேச்சான சமிக்ஞைகள்தான் வெளியிட்டுள்ளனர். இதனை நாம் பார்க்கும் போது சர்வதேச பொறிமுறை தேவையில்லை. விசாரணையை நாம் உள்நாட்டில் மேற்கொள்ள முடியும் என்ற வகையில் அவர்களுடைய நிலையுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் கருத்துப் பரிமாறுவதற்கு முன்பாக இலங்கை அரசு தனது உண்மையான நோக்கம் என்ன? தாங்கள் எதை நோக்கி போகப்போகிறோம் என்பதை முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இவற்றை தென்னாபிரிக்க அரசு மிக தெளிவாக இலங்கை அரசுக்கு சொல்ல வேண்டும். ஏனைய நாடுகளும் இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசுக்கு சொல்லவேண்டும். அதன் பின்பு தான் பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசுவதற்கு சரியான சூழல் ஏற்படும் என்பது முக்கிய விடயம் என்பது முதலாவதான தீர்மானமாக எடுக்கப்பட்டது. மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக திட்மிட்ட வகையிலான குற்றங்களை புரிந்துகொண்டு வந்துள்ளன. அவற்றை யாரும் மறுதலிக்க முடியாது. உண்மையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தை தோற்கடிக்கவே தமிழர் தேசம் மீது திட்டமிட்ட தாக்குதல்கள், குற்றங்கள் புரியப்பட்டு வந்துள்ளன. தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட குற்றங்களை இழைக்கப்பட்டன என்பதை இந்த அரசாங்கம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிச்சயமாக அமைதி, சமாதானம், நீதி என்பன வெறும் கதையாகத் தான் இருக்கும். இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபை, வடக்-கு மாகாண சபை மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் வேறும் சில அரசாங்கங்கள் என்பன தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன என்பதை கருதிற்கொண்டு இதை அரசாங்கம் ஏற்பதனூடாக தான் இவை இனிமேலும் நடக்காமல் அவர்கள் வந்து தங்களது பங்கை ஆற்ற முடியும் என்பதையும் தீர்மானமாக கேர்பன் மாநாட்டில் இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிடப்பட்டு இராணுவ மயமாக்கப்பட்டன. இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக வும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உண்மையில் மக்களுக்குத் தொடர்ச்சியான விரக்தியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த இராணுவமயமாக்கல் செயற்பாட்டால் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகமோசமானது. இதனால் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு போகமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவ வெளியேற்றம் என்பது மிக முக்கியமானதாகவும் அமையும் என 3 ஆவது தீர்மானத்தில் உள்ளது. நான்காவது தீர்மானத்தில் 10 இலட்சம் தமிழ் மக்கள் வெளிநாடு சென்றுள்ளனர். ஆகவே தமிழ் மக்களினுடைய உரிமைகள் விடுதலை என்பதில் அவர்களின் பங்களிப்பு என்பது முக்கியமானது. ஆகவே அவர்களில் ஒரு பகுதியினர் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதும் அவர்கள் சுதந்திரமாக இங்கு வந்துபோக முடியாது என்பதும், அவர்கள் வந்துபோக முடியாததன் காரணமாக நீதியை, சமாதானத்தை இங்கு உருவாக்குவதற்கு அவர்களில் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது என்ற விடயம் கலந்துரையாடப்பட்டது. எனவே வெளிநாட்டிலுள்ள ஒருபகுதியினர் மீதான தடைகள் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதும் ஓர் தீர்மானமாக எடுக்கப்பட்டது. அடுத்த தீர்மானமாக பயங்கவாதத் தடைச் சட்டம், 6 ஆவது திருத்தச் சட்டம் போன் றன அகற்றப்படவேண்டும் என்றும், அடுத்து தடுப்பில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதும் அது எந்தவகையான தடுப்பு முகாம்களில் இருந்தாலும் சரி, இராணுவ முகாம்களில் இருந்தாலும் சரி, அல்லது சிறைக்கைதிகளாக இருந்தாலும் சரி, அனைவரினதும் பெயர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதும் சொந்த வாழ்வில் சுமுகமான நிலை ஏற்படவேண்டும் போன்றன ஒரு கோரிக்கையான தீர்மானமாக அங்கு நிறைவேற்றப்பட்டது. ஆறாவதாக சித்திரவதை, மிரட்டல், துன்பு றுத்தல், பாலியல் வன்முறை, வெள்ளை வான் கடத்தல் என்பன இலங்கையில் நடை பெறுவதாக மனித உரிமை அமைப்புக்கள் 2014 ஆம் ஆண்டு பட்டியலிட்டுக் கூறி யுள்ளன. எனவே மேற்குறித்த எல்லாம் இலங்கையில் இன்றும் நடைபெறுவதை இந்த அரசு ஏற்றுக்கொண்டு அவை மேலும் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. இறுதியாக யுத்தத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்துள்ளனர். அதில் அவர் களை நினைவுகூரும் விடயம் இலங்கை அரசினால் தடைசெய்த விடயமாக உள் ளது. இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி, ஏனையோரும் கூட தமது பிள்ளைகளை யுத்த காலத்தில் இழந் துள்ளனர். ஆகவே அவர்களும் நினைவு கூருவதற்கான சரியான சூழல் உருவாக் கப்பட வேண்டும் என்ற விடயம் இறுதித் தீர்மானமாக எடுக்கப்பட்டது என்றார். |
ஐ.நா தீர்மானம் தமிழருக்கு நீதியைப் பெற்றுத் தருமா என நவநீதம்பிள்ளை சந்தேகம்!
Related Post:
Add Comments