இலங்கை இந்திய அரசாங்கங்கள் பேசிக்கொண்டாலும் மீனவர்கள் பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்ற 19ஆவது சர்வதேச மீனவர் தினத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தேசிய பிரச்சனை அதனை ராஜதந்திர ரீதியில் தான் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட நாட்கள் அதனை தீர்க்காது விட முடியாது.
மீனவர்களின் எல்லை தாண்டல் உடனே நிறுத்தப்பட வேண்டும் எமது வளங்கள் பாதுகாக்க பாடவேண்டும்.இந்திய இழுவை படகினால் எமது கடல் வளங்கள் மட்டும் அல்ல வறிய மீனவர்களின் உபகரணங்கள்ளும் அழிக்கப்படுகின்றது.
இரு நாட்டு அரசாங்கமும் பேசுகின்றார்கள். ஆனால் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இதற்காக தீர்வு விரைந்து எடுக்கபடவேண்டும். என மேலும் தெரிவித்தார்.