தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த துயரத்தில் இருந்த தாய்க்கு தனது கணவனையும் இழக்க நேரிட்டது, இதனால் மிகவும் மனமுடைந்து தனது வீட்டு சுவரில் மாட்டியிருக்கும் படத்துக்கு கூட விளக்குகொழுத்த பயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்பது இறந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை, என்னைப் போன்று இன்று எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றார்கள் தங்களின் மகள் மற்றும் மகன், கணவன்மார்களின் உருவப்படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு. எங்களின் மனதில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிலைத்து நிற்கவேண்டுமாயின், நாங்கள் கேட்கும் இந்த கோரிக்கையை செவிமடுத்து நல்லதொரு பதிலை தெரிவிக்க வேண்டுமென்றார்.