வட மாகாண இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்!- சமந்தாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை!

வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சருக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பிற்காக பாரியளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையை, வட மாகாண முதலமைச்சர் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர், வட மாகாணத்திற்காக விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வட மாகாண முதலமைச்சரை இன்று முற்பகல் அவர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் வா ழும் பகுதிகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் போதாது, மேலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற மனோநிலையில் வடமாகாண தமிழ் மக்கள் இருப்பது எனக்கு தெரியும்.
எனினும் தமிழர்களுக்காக செய்யப்படும் எந்த விடயங்களும் மாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கப்படுவதும், எந்த விடயத்தையும் மிக தாமதமாக செய்யும் இலங்கையர்களை மனப்பாங்குமே அந்த தாமதத்திற்கு காரணமாகலம்.
ஆனால் மாற்றங்கள் செய்யப்படும் மேற்கண்டவாறு இன்றைய தினம் யாழ்.வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சமந்தா பவர் தமக்கு கூறியிருப்பதாக வடக்கு முத லமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.வந்த சமந்தா காலை 10 மணிக்கு வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசியிருந்தார்.
இதன்போதே மேற்படி விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 
வடகிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகுந்த கரிசனை கொண்டுள்ளார். இதனாலேயே நாம் இங்கு வந்திருக்கின்றோம்.
மேலும் நாம் இந்த நாட்டை ஒரு ஜனநாயக நாடாக மாற்றியுள்ளமையினையும், அவர்களுடைய நாடும் ஒரு ஜனநாய நாடு என்றவகையிலும் எமக்கு சகல உதவிகளையும் வழங்குவதற்கு அவர்கள் ஆயத்தமாக உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்ப்பட்டதன் பின்னர் நடந்திருக்கும் மாற்றங்கள் போதாது. இன்னும் மாற்றங்கள் வேண்டும் என்ற மனோநிலையில் வடமாகாண மக்கள் உள்ளமையினை தான் அறிந்து கொண்டுள்ளதாக கூறிய அவர்,
தங்களுடைய நாட்டிலும் ஒபாமா ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவ்வாறான பல விமர்சனங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டதுடன், தமிழ் மக்கள் சார்பாக எந்த விடயங்கள் நடந்தாலும் அது வேறு வகையில் நோக்கப்படுவதும் இத்தகைய தாமதத்திற்கு காரணமாக  அமையலாம் எனவும்,
பொதுவாகவே இலங்கையில் சகல விடயங்களையும் தாமதமாகவே செய்யும் பாங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தாங்கள் அவ்வாறில்லை. எந்த விடயத்தையும் உடனக்குடன் முடிக்க வேண்டும். என்ற நோக்கத்தைக் கொண்டவர்கள் எனவும் கூறியிருந்தார். 
இந்நிலையில் நாம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகளையும், காணிகளையும் வலிந்து பறித்து வைத்திருக்கும் படையினர் எங்கள் வாழ்வாதாரத்தையும் அழித்துள்ளதுடன் தமிழ் மக்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என்ற கண்னோட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும்,
ஆட்சி மாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னர் படையினரின் கடந்தகால செயற்பாடுகள் முடக்கப்பட்டு அவர்கள் படைமுகாம்களுக்குள் இருக்கிறார்கள் என்பதல்ல உண்மை, அவர்கள் தற்போதும் கடந்தகால செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மையானது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்திலும் பாதுகாப்புக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழர்  நலன்களுக்காக பயன்படுத்தியிருக்கலாம். நாம் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாகும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
இந்நிலையில் நாம் குறிப்பிட்ட விடயங்களை பதிவு எடுத்துக் கொண்டார். மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்கச் செய்வோம் என அவர் உறுதியளித்துள்ளார் என மேலும் குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila