யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனவும், அதற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது என்றும் வட மாகாண ஆளுனர் பாலிஹக்காரவிடம் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் வலியுறு த்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பயணம் செய்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் வட மாகாண ஆளுனர் பாலிஹக்காரவை அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தில் சந்தித்து பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன் இலங்கைக்கான அமெரிக்கத் துதுவர் அதுல் கெசாப் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மான்பிரீத் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளி யிட்டுள்ள சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணி க்கையை குறைப்பதற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வடமாகாண முதலமை ச்சர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்த சம ந்தா பவர், இச்சந்திப்பைத் தொடர்ந்து யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் புதிய விஞ்ஞான கூடத்தையும் திறந்து வைத்துள்ளார்.(