மாதுலுவே சோபித தேரர் காலமானார்

எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய துக்கதினமாக அறிவிப்பு:-
மாதுலுவே சோபித தேரர் காலமானார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

நீதிக்கான சமூக அமைப்பின் அழைப்பாளரும், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியும் வணக்கத்திற்குரிய மாதுலுவே சோபித தேரர் காலமானார்.

இன்று அதிகாலை சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சோபித தேரர் காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சோபித தேரர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஆட்சி மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் போராடிய முக்கிய பிரமுகர்களில் சோபித தேரர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோபித தேரரின் பூதவுடல் இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

சோபித தேரருக்கு சிங்கப்பூரின் ஏழு நிபுணத்துவ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது
அண்மையில் இலங்கையின் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சத்திரசிகிச்சை ஒன்றுக்கு உட்பட்ட சோபித தேரர், கடுமையாக சுகவீனமுற்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

73 வயதான மாதுலுவே சோபித தேரர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விரபங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நேருக்கு நேர் சோபித தேரர் போராடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும், சுயாதீன ஆணைக்குடுக்கள் உருவாக்க்பபட வேண்டுமெனவும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1942ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி மாதுலுவாவே என்னும் ஊரில் சோபித தேரர் பிறந்தார்.

தந்தையின் பெயர் பதிரகே தொன் ஹப்புஹாமி, தாயின் பெயர் கரலோனாஹாமியாகும்.

சோபித தேரரின் இயற் பெயர் பீ.டி. ரட்னசேகரவாகும்.

1955ம் ஆண்டு துறவறம் பூண்ட சோபித தேரர் 1962ம் ஆண்டு பூரண பௌத்த பிக்குவாக அங்கிகரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய துக்கதினமாக அறிவிப்பு:-

எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதுலுவே சோபித தேரரின் மறைவை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோபித தேரரின் பூதவுடல் இன்றைய தினம் கொழும்பி;ற்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சி பீடம் ஏற்றுவதில் சோபித தேரர் முக்கிய பங்களிப்பினை ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila