பிரபல வர்த்தகர் முகமட் சியாமை முன்னாள் பிரதிபொலிஸ் மா அதிபர் வாஸ்குணவர்த்தன படுகொலை செய்யவில்லை என வர்த்தகரின் தந்தை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்று முஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இணங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உட்பட்ட 06 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் நீதிமன்றிற்கு வெளியே கருத்து தெரிவிக்கையிலேயே கொலை செய்யப்பட்டவரின் தந்தை இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனது மகனை கிரிசாந்தவும், பௌசுடீனுமே கொலைசெய்தனர். வாஸ்குணவர்த்தன குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை வாஸ்குணவர்த்தன தனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தீர்மானித்தால் நான் அவரிற்கு ஆதரவாக சாட்சியமளிக்க தயார்.
வாஸ்குணவர்த்தன மேல்முறையீடு செய்தால் நான் சாட்சியமளிப்பேன்,ஆதாரங்களை முன்வைப்பேன்,அவர் எனது மகனிற்கு எதனையும் செய்யவில்லை என கொலைசெய்யப்பட்ட வர்த்தகரின் தந்தை தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகர் முகமட் சியாமை வாஸ் குணவர்த்தன படுகொலை செய்யவில்லை - முகமட் சியாமின் தந்தை
Related Post:
Add Comments