முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணி இன்னும் அரச படையினர் வசம் உள்ளதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படையினரதும் கட்டுப்பாட்டில் இன்றுவரை உள்ள நிலப்பரப்பாக மாவட்டச் செயலகத்தினால் இனம் கானப்பட்டு காணி விடுவித்தல் தொடர்பான ஆய்விற்காக சமர்ப்பிக்கப்பட்ட சான்று ஆவணங்களின் பிரகாரம் 13487 ஏக்கர் நிலப்பரப்பு இன்னும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு உள்ள நிலங்களில் காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொதுக் காணிகளாக 12 ஆயிரத்து 785 ஏக்கர் காணிகளும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் காணிகளும் படையினர் வசம் உள்ளமை மாவட்ட செயலக புள்ளிவிபரங்களின் பிரகாரம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த 13487 ஏக்கர் நிலப்பரப்புகளிற்கும் மேலதிகமாக 1983 ம் ஆண்டு முதல் சிங்கள குடியேற்றங்களிற்காக கையகப்படுத்திய ஆயிரக் கணக்கான நிலங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பறிபோனமையும் குறிப்பிடத் தக்கது.