தமிழகத்திற்கு நிவாரணம் வேண்டாமாம்! இந்திய தூதரக அதிகாரிகள் அறிவிப்பு!!

independance_india_jaffna_02வெள்ளப்பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தமிழக உறவுகளிற்கு எந்தவொரு உதவியும் தேவையில்லையென இலங்கையிலுள்ள இந்திய துணைதூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. நேற்று முன்தினம் வடமாகாண முதலமைச்சரிடம் இலங்கையிலுள்ள இந்திய தூதரால் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தமிழக உறவுகளிற்கு உதவுவது தொடர்பில் நேற்று முன்தினம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது அமைச்சர்களுடன் ஆலோசித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்திய தூதரைத் தொடர்பு கொண்டு எத்தகைய உதவிப்பொருட்களை ஒப்படைத்தால் அதனை தமிழகத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பிக்க முடியுமென கோரப்பட்டிருந்தது.
எனினும் எத்தகைய உதவி பொருட்களும் தேவையில்லையென முகத்திலடித்தது போன்று பதிலளித்துள்ள இந்திய தூதர் எதனையும் பொறுப்பேற்கவோ அவற்றினை தமிழ் நாட்டிற்கு எடுத்து சென்று சேர்ப்பிக்கவோ தமது அலுவலகம் தயாராக இல்லையென தெரிவித்துமுள்ளார்.
அவ்வாறாயின் நிதி உதவியையாவது ஏற்கவேண்டுமென்ற முதலமைச்சரது கோரிக்கையினை பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்த போதும் அதனை பற்றி பின்னர் தகவல்கள் இல்லையென முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ள அவலங்களினை சந்தித்துள்ள தொப்புள் கொடி உறவுகளிற்கு உதவ தன்னார்வமாக பொருட்களை சேகரித்துவரும் நிலையில் இத்தகைய அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இத்தகைய அவல நிலையிலும் கூட தூதரக அதிகாரிகளதும் இந்திய அதிகார தரப்பினதும் மனோநிலை மாறியிருக்கவில்லையாவென கேள்வி எழுந்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila