6 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கம், தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியன கூட்டாக ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், தங்களது கோரிக்கைகளுக்கான நியாயமான பதில் கிடைக்க வேண்டும் எனவும், அவ்வாறு பதில் கிடைக்காத பட்சத்தில் பாரிய வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் ஊழியர்கள் அறிவித்திருந்துள்ளனர்.
விமான நிலையத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்களோடு மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்குள் சாதகமான பதிலை ஊழியர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
விமான நிலைய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இன்று பிற்பகல் 2.20 வரை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான நிலைய நிறுவனத்தின் தலைவரினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் விமான நிலைய கிளை தெரிவித்துள்ளது.
வருடாந்த கொடுப்பனவை 45000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.