கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை இன்று யாழில் ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து அறியவருகின்றது.
இவ் அமைக்கப்பட்ட பேரவையில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சியின் பிரமுகர்களும் வடமாமாகாண முதலமைச்சரும் மதத் தலைவர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கூட்டத்திற்கு யாழிலிருந்து வெளிவரும் தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகை ஆசிரியர்களும் சமயப்பெரியார்கள் மற்றும் கல்வியலாளர்களும் கலந்துகொண்டிருந்தபோதும் ஊடகத் தரப்பில் ஏனையவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் விளக்க உரை

அதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் த.தே.மக்கள் முன்னணி மற்றும் தமிழரசுக் கட்சி அதிர்ப்தியாளர்கள் என பலர் கலந்துகொண்டிருக்கின்றனர் குறிப்பாக தமிழரசுக் கட்சி முத்த தலைவரும் தமிழரசுக் கட்சி செயலாளர்களில் ஒருவருமான பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களும் கலந்துகொண்டுள்ளார். புளட் தலைவர் சித்தாத்தன் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளமையால் அதன் பிறிதொரு தலைவரான சிவநேசன் கலந்துகொண்டிருந்ததோடு ரெலோவினை நேர்ந்த சிவாஜிலிங்கம் மற்றும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிய வருகின்றது.
முதலமைச்சரின் விளக்க உரை