இதனை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வருங்கால மக்களுக்கு இவ்வாறான அமைப்பு இல்லை எனின் அவர்களுக்கான உத்தரவாதம் எவ்வாறு அளிப்பது என்பது இன்றைய நிலைமை. அதனால் இப்பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் பேரவையின் கொள்கைகளை எற்றுக் கொண்டவர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கின்றோம். இதில் சுமந்திரன் வரவேண்டும் என்று கூறினால், அவரையும் நாங்கள் இணைத்துக் கொள்வோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எங்களுக்கான கொள்கைகள் இருக்கின்றன. தழிழ் மக்களுடைய எதிர்கால சிந்தனைகள் இருக்கின்றன. அந்த சிந்தனை உள்ள அனைவரும் ஒன்றினைந்து செயற்பாடுவோம். புதிய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவது உண்மை என்றாலும் அதில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எந்தவகையில் இருக்கின்றது என்பது தான் இன்றைய எமது பேரவையின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்த தழிழ் மக்கள் பேரவையினை விரிவுபடுத்தி மக்களுடைய பலமான ஒரு இயக்கமாக மாற்ற வேண்டிய நிலைப்பாடு எமக்கு இருக்கின்றது. தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே. தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள். மக்கள் அவைக்குள் எவரும் பின் கதவு வழியாக நுழைந்திருக்கவில்லை. எல்லோரும் முன்கதவு வழியாகவே வந்திருக்கின்றார்கள் என்றார். இதேவேளை, தமிழ் மக்கள் அவையில் முன்னாள் அமைச்சர்கள் கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா இணைக்கப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார். எமக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது. என்பதை நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றோம். இந்நிலையில் எங்களுடைய கருத்துக்களுக்கு வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக அவ்வாறான கருத்துக்களை கொண்டிருப்பவர்களை எதிரிகளாக பார்க்க முடியாதே? எனவே நாங்கள் எங்களுடைய பணியை தொடர்ந்தும் செய்வோம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைத்தால் நல்லது. ஆனால் தமிழ் மக்கள் அவைக்கு ஒரு கொள்கை இருக்கின்றது. அந்த கொள்கை விடயத்தில் நாங்கள் சற்றும் நெகிழ்வு தன்மையை காட்டப்போவதில்லை என்றார். |
எமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் சுமந்திரனையும் இணைத்துக் கொள்வோம்! - விக்னேஸ்வரன்
Related Post:
Add Comments