எதிரிகள் - துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை: ஒருபோதும் இணையோம் என்ற தலைப்புடன் உள்ளூர் பத்திரிகை ஒன்றிலும் சில இணையத்தளங்களிலும் வெளி வந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என தமிழ் ஈழ விடு தலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கல நாதன் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
அவர் அனுப்பிய அறிக்கையின் விபரம் வருமாறு,
ஊடக மறுப்பறிக்கை
“எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக் கள் பேரவை - ஒருபோதும் இணையோம்” என்ற தலைப்புடன் 29.12.2015 அன்று உள்@ர் பத்திரிகை ஒன்றிலும் சில இணையத் தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைகின் றேன்.அச்செய்தியில் நானும் எமது கட்சியின் உப-தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமும் (ஜனா) கூறியதாக வெளிவந்த செய்தி எம்மால் குறிப்பிடப்படவில்லை அது உண்மைக்கு புறம்பானது. இச்செய்தியானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினதோ அல்லது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எமது கருத்தோ அல்ல என்பதையும் மிகவும் தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றேன்.
கடந்த 27.12.2015ல் கூடிய எமது கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமாக கட்சியின் நிலை ப்பாட்டை (கட்சியின் செயலாளர் நாயகத்தி னால்) ஊடக அறிக்கை மூலமாக தெளிவு படு த்தி இருந்தோம். தமிழ் மக்களின் ஒற்றுமை என்ற பலத்தின் ஊடாகவே எமது அரசியல் உரிமைகளையும், இனப்பிரச்சினைக்கான தீர்வையும் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். இந்த நிலையில் எப்படி இந்த வார்த்தையை நாம் பிரயோகித்திருக்க முடியும். இக்கருத் தினை நாம் ஒருபோதும் கொண்டிருக்கவு மில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(