இம்மானுவேல் அடிகளார் பாவமன்னிப்புக் கொடுப்பாரா?


புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இப்போது இரு தரப்புக் கொள்கைகள் காணப்படுகின்றன.
அதில் ஒன்று விடுதலைப்புலிகளின் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்ற தரப்பு.
மற்றைய தரப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நிலைமைகளுக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றவர்கள். இந்த இரண்டு தரப்பில் யார் சரியான கொள்கை உடையவர்கள் என்று ஆராய்வது நன்மை தரக்கூடியதன்று.

மாறாக தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை வாழவேண் டும். அந்த நிம்மதி என்பது எக்காலத்திலும் குழப்ப முறாமல் நிரந்தரமானதாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வதே இங்கு பொருத்து டையது.
அப்படியானால் இத்தகையதோர் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியவர்கள் அரச தரப்பாகவே இருக்கமுடியும். 
எனினும் இலங்கையின் ஆட்சிப்பீடங்களைப் பொறுத்தவரை காலம் கடத்துதல் என்பதைத் தவிர, எச் சந்தர்ப்பத்திலும் நாட்டில் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நினைப்பு ஆளும் தரப்பிடம் அறவேயில்லை.

ஆளும் தரப்பைப் பொறுத்தவரை இந்நாடு சிங்கள மக்களுக்கும் பெளத்த சமயத்துக்குமானது. எனவே நாட்டில் உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்புக்கள் மருந்துக்கேனும் சிறுபான்மை மக்களின் நலனுக்குச் சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே அரசியல் அமைப்புக்கள் பிரசவிக்கப்படுகின்றன.

இருந்தும் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடந்த மிகப்பெரும் கொடூரப் போரின் பின்னர் சர்வதேசத்தின் அழுத்தம் ஏதோவொரு வகையில் இலங்கை அரசுக்கு உபாதையைக் கொடுக்கிறது.
இதனால்தான் முன்னைய அரசு செய்த பாவ த்தை நாங்கள் சுமக்கின்றோம் என்று இந்தநாட் டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
பாவத்தைச் சுமப்பது வேறு. பாவத்தைக் கழுவுவது வேறு. எனவே இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது பாவத்தை சுமப்பது என்றாகும். 

பாவத்தைச் சுமப்பது என்பது பாவப்பட்டவன் பட்டு அனுபவித்து சுமந்த பாவத்தைத் குறைப்பது. இதனால் துன்பப்பட்டவனுக்கு எந்த விமோசனமும் கிடையாது.
ஆக, பாவப்பட்டவன் தன் பாவத்தைக் கழுவ வேண்டும். இதற்காக பிராயச்சித்தம் செய்வதே ஒரே வழியாகும். ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாவம் சுமப்பதை விடுத்து பாவத்தைக் கழுவ முன்வரவேண்டும். 

இதன்மூலம் பாவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமன்றி துன்பப்பட்டவன் பாக்கியவானாகவும் முடியும். எது எப்படியாயினும் சர்வதேசத்தின் அழுத்தம் அல்லது காலத்துக்குக் காலம் நடைபெறும் சர்வதேசம் சார்ந்த கூட்டங்களில் அளிக்க வேண்டிய பதிலுக்கான சூழ்நிலைகாரணமாக செய்பா வத்துக்கு பாவமன்னிப்புப்பெறுவது இலங்கை அரசுக்குத் தவிர்க்க முடியாததே.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் ஏதோவொரு தீர்வுத்திட்டத்தை பாவமன்னிப்புக்கான சாட்சியமாக இலங்கை அரசு முன்வைக்கப்போகின்றது. 

பாவமன்னிப்பு வழங்குவதற்கு ஒரு அருட்தந்தை தேவையல்லவா? அதற்காக உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எல்.ஜே.இம்மானுவேல் அடிகளாரை இலங்கை அரசு அழைக்கிறது. 
அரசின் அழைப்பை ஏற்று இம்மானுவேல் அடி களார் இலங்கைக்கு வருவாராயின், அவர் அரசுக்குப் பாவ மன்னிப்பு வழங்குவாரா அல்லது ஈழத்தமிழ் மக்களின் துன்பச் சுமையை தன்னில் சுமந்து மீட்சி கொடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.      
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila