தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மென்டிஸ் தற்போது வெளிநாட்டில் உள்ளார், இதன் காரணமாக குறிப்பிட்ட அதிகாரியே பிரகீத் விசாரணைகளில் புலனாய்வு துறையினருக்கு தலைமை தாங்குகின்றார். பிரகீத் கடத்தப்பட்டு காணமற்போவதன் பின்னணியில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுதலை செய்வதை அரச தரப்பு சட்டத்தரணி கடுமையாக எதிர்த்து வருகின்றார். இறுதியாக ஹோமாஹம நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவேளையும் சந்தேகநபர்களான இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த 11 பேரிற்கு பிணை வழங்குவதை அவர் கடுமையாக எதிர்த்திருந்தார். இந்த நிலையில் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த அந்த அதிகாரி அரதரப்பு சட்டத்தரணியை நீக்கிவிட்டு புதியவர் ஓருவரை நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தை வளைத்துப்போடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. |
பிரகீத் கடத்தல் விவகாரத்தில் இராணுவ அதிகாரிகளை விடுவிக்கும் முயற்சியில் புலனாய்வு அதிகாரி!
Related Post:
Add Comments