இதுவரை தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் இதில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீதவான் பீரிஸ் மாத்தறை மாவட்ட நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இவரது இடமாற்றம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது இடமாற்றத்தை காலம் தாமதிக்குமாறு பல தடவைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ள போதிலும் 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது. |
தாஜூடீன் கொலை வழக்கை கையில் எடுக்கிறார் சரத் என் சில்வாவின் நண்பர்!
Related Post:
Add Comments