யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் மக்கள் தம்மை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிகளிலும் முயன்றுள்ளார்கள் என்பதை இவை வெளிப்படுத்திக் காட்டுக்கின்றன.
கடலில் பயணிக்கும் படகினை நிலத்தில் புதைத்து அதன் மேல் மண்போட்டு மறைந்து அதனை தமது தற்காலிக வீடாக பயன்படுத்தி செல் வீச்சுக்களில் இருந்தும், குண்டு மழையில் இருந்தும் தப்ப முயன்றுள்ளார்கள். மரக்குற்றிகளை, பனைமரங்களையும் அடுக்கி பதுங்கு குழி அமைத்து குண்டு மழையில் இருந்து தப்ப முயன்றுள்ளனர்.
மக்கள் உயிர் வாழ்வதற்காக முயன்ற வழிகளை இன்றும் படம் போட்டுக் காட்டுவதாக அவை மண்ணில் சிதைவடைந்து காணப்படுகின்றன. அவற்றில் மக்களின் பல உடமைகளும், சிலரது உடலங்கள் கூட புதையுண்டு காணப்படுகின்றன. இவை கூட இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவில்லை என்பதற்கான தடங்களும் காணப்படுகின்றன.