தனது நத்தார் தின செய்தியினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் மீள்குடியேற்றம் – அரசியற் கைதிகளின் துரித விடுலை – புனர்வாழ்வு பெற்றவர்களின் பாதுகாப்பு – அவர்களுக்கான வாழ்வாதாரம் போன்றன முன்னுரிமை பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து யாப்பினால் உறுதி செய்யப்படுகின்ற நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு தேவையாகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை பற்றி இலங்கை ஜனாதிபதியை சில தினங்களுக்கு முன்னர் யாழ் ஆயர் இல்லத்திற் சந்தித்த போதும் குறிப்பிட்டிருந்தோம். ஆறுதலாக அவை பற்றித் தெளிவாக அவருக்குத் தெரியப்படுத்தி விரைவான நடவடிக்கையை எடுக்கத் தூண்டுவோமெனவும் யாழ்.ஆயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.பிரான்சீஸ் பாப்பரசர் இரக்கத்தின் ஆண்டை அறிவித்துள்ளார். இந்த இரக்கத்தின் ஆண்டானது பாவமன்னிப்புப் பெற்று ஆண்டவரோடும் அயலவரோடும் ஒப்புரவாகும் காலமாகும். இலங்கை வாழ் இரண்டு இனங்களும் அன்புறவில் இணைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு புதிய வாழ்வைத்;தொடங்க நல்லெண்ண அரசானது இக்காலத்தில் முழுமையான செயற்பட வேண்டுமென அன்பு அழைப்பு விடுக்கிறோம்.
புதிய ஆண்டு நம்பிக்கையின் ஆண்டாக – நல்லெண்ண அரசின் செயற்பாடுகளை வேகப்படுத்தும் ஆண் மலர இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் யாழ்.ஆயர் தெரிவித்துள்ளார்.