உறவுகளை இழந்ததைப் போன்று அரசாங்கத்தின் உதவித் திட்டங்களையும் இழக்காதீர்கள்: ஜனாதிபதி ஆணைக்குழு

உறவுகளை இழந்ததைப் போன்று அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்ட ஈடுகள், உதவித்திட்டங்களையும் இழந்து விடாதீர்கள். மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு அதனூடாக கிடைக்கவிருங்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு காணமல்போன தமது உறவுகளை கண்டுபிடித்து தாருங்கள் என்று கேட்டவர்களிடத்தில் ஆணைக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றது.
இவ்விசாரணைக்கு வந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் நேரத்தினையும் பார்க்க அவர்களை சமாளித்து நட்டஈடு மற்றும் மரணச்சான்றிதழ்களை திணிக்கும் முயட்சியில் இஆணைக்குழுவினர் ஈடுபட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது.
குறிப்பாக இறுதி யுத்தத்தம் முடிந்த பின்னர் இராணுவ கட்டுப்பாட்டிற்கு வந்த போது எனது மகள் காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று த.குனேஸ்வரி என்னும் தாய் ஆணைக்குழுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
குறிப்பாக உங்களுடைய கணவன், பிள்ளைமார்களை இழந்துள்ளீர்கள். அவர்களை இழந்துது போல் அரசாங்கம் உங்களுக்கு தரவுள்ள உதவிகளையும் இழந்து விடாதீர்கள்.
மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு அரசங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
விசாரணைகளை நாங்கள் நிறுத்த மாட்டோம். தொடர்ந்து காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரித்துக் கொண்டு தேடுதல் நடத்துவோம் என்றார்கள்.
எங்களுடைய உறவுகள் உயிருடன் இருக்கின்றார்கள் என்று எண்ணிக் கொண்டே உயிருடன் இருக்கின்றோம். அவர்களின் முடிவு தெரியாமல் எவ்வாறு மரணச் சான்றிதழ்களைப் பொற்றுக் கொள்வது.
அவர்களுடைய மரணத்தின் ஊடாக எமக்கு கிடைக்கும் உதவிகள் தேவையற்றவை. அவர்கள் திரும்பி வந்தால் இந்த மரணசான்றிதழ்களை என்ன செய்வது என்று சாட்சியமளிக்க வந்தவர்கள் ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பினார்.
அவர்கள் உயிருடன் திரும்பி வந்துவிட்டால் அதன் பிறகு அந்த மரணசான்றிதழ்களை குப்பைக்குள் போட்டுவிடுங்கள் என்றும் பதிலளித்திருந்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila