இதனால் முல்லைத்தீவு மாவட்ட வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர் யுவதிகள் கடும் விசனமுற்ற நிலையில் உள்ளனர் இதுகுறித்து கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:
இறுதி யுத்தத்தின் பின்னர் இதுவரை தமது அலுவலகத்திற்கு சிற்றூழியர் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் இந்த கடமைகளை அலுவலக கவலாலிகளே கவனித்து வந்ததாகவும் இந்நிலையிலேயே கடந்த வாரம் இவ்விரு யுவதிகளும் மத்திய அரசால் முதல் நியமனமாக நியமனம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே சிற்றூளியர்களாக நியமனம் செய்யப்படவேண்டுமேன்ற அரச சுற்று நிருபம் உள்ளபோதும் இவ்வாறு பிற மாவட்டத்தவர் நியமனம் செய்யப்பட்டமையானது புரியாத புதிராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்நியமனத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் கருத்துக் கூறுகையில் இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதுத்துவம் செய்யும் பாராளூமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் இப்பதவிக்கு பொருத்தமான முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் யுவதிகளே நியமிக்கப்பட வேண்டுமெனவும் இதற்க்கு நீதி கிடைக்காத பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்