ஜனாதிபதி மைத்திரிபாலவின் வருகையை தொடர்ந்து, ஜனவரி 9ம் திகதி, திரு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஓர் புதிய அரசு நியமிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் மூலம், ஒரு வருடத்தில் பாதிக்கப்பட்டோர், மக்கள், விசேடமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எவற்றை புதிதாக அடைந்துள்ளார்கள். இக் கட்டுரையை தொடர்ந்து எழுதுவதற்கு முன்னர், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம், என்னால் ஓர் கட்டுரை, “ஜனாதிபதி பொதுவேட்பாளரும், இனப் பிரச்சனையும்” என்ற தலையங்கத்தில் ஓர் கட்டுரை எழுதி பிரசுரிக்கப்பட்டது. அக் கட்டுரையில், “ராஜபக்ச ஓர் சர்வாதிகாரியும் இனவாதியும் என எழுதப்பட்டதுடன், ஆனால் இலங்கைதீவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஓர் நீதியான அரசியல் தீர்வு சர்வதேச அனுசரணையுடன் கிடைக்க வேண்டுமானால், நிச்சயம் ராஜபக்ச மீண்டும் ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டுமென, எமது பல தசாப்த கால அனுபவம், கற்றுக் கொண்ட படங்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். இக் கட்டுரை பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு கசப்பை ஏற்படுத்திவிட்டது.
உண்மையை கூறுவதனால், இந்தியாவில் மோசடிகள், ஊழல்கள் நிறைந்த அதிகாரிகள் இருக்கும் வரை இந்தியா ஒரு பொழுதும், சிறிலங்காவின் உண்மையான இந்தியாவுடனான கொள்கையை புரிந்து கொள்ளப் போவதில்லை.
சிறிலங்கா ஒரு பொழுதும், சீனாவையோ பாகிஸ்தானையோ ஓரம் கட்டிவிட்டு, இந்தியாவுடன் உறவு கொள்ளப் போவதில்லை. இந்தியாவை பொறுத்தவரையில் - சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளையும் ஓரே நிலையில் தான் வைத்திருப்பார்கள்.
இதிலும் ராஜபக்ச போன்ற பௌத்த பேரினவாதிகள், இந்தியாவுடன் மட்டுப்படுத்தப்பட்ட உறவை பேணும் அதே வேளை சீனா பாகிஸ்தானுடனேயே தமது விசுவாசமான உறவை பேண விரும்புவார்கள்.
எனது கட்டுரையை படித்த சிலர், ராஜபச்சவை மீண்டும் 3வது முறை ஜனாதிபதியாக அமர்த்த நினைப்பது ஓர் நல்ல சிந்தனை இல்லையென கூறினார்கள். எனது கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தேன்.
“........ராஜபக்ச 3வது தடைவயாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் மூலமே, தமிழ் மக்கள் சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் அரசியல் உரிமையை பெற்றுக் கொள்வதுடன், தமிழர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கில் மீறப்பட்டுள்ள போர்க்குற்றங்களிற்கு ஓர் சர்வதேச விசாரணையையும் உருவாக்க முடியும்” என கூறியிருந்தேன்.
நான் தொடர்ந்து அக்கட்டுரையில்,
“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை, ராஜதந்திரம் தெரிந்த எந்தவொரு பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களும் தவறவிடாது சந்தர்பத்தை நன்றாக பயன்படுத் வேண்டும்.
அவர்கள் வாக்களிக்கும் பொழுது, யார் வெளிப்படையான ஓர் கொள்கையை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். ஓர் புதிய ஜனாதிபதியினால், தமிழர்கள் எப்படியாக பயன் அடைய முடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்” என கூறியிருந்தேன்.
நான் நிச்சயம் ராஜபக்சவின் ஆதரவாளனோ அல்லது அவரது கொள்கையில் பற்றுக் கொண்டவன் அல்ல. ஆனால், வடக்கு கிழக்கில் உள்ள எந்த தமிழனாக இருந்தாலும், தங்களது அரசியல் உரிமைகளை சர்வதேசத்தின் அணுசரணையுடன் பெற்றுக் கொள்ள விரும்பினால், சிறிலங்காவில் நிச்சயம், மேற்கு நாடுகளினால் வேண்டப்படாத அரசே சிறிலங்காவில் பதவியிலிருக்க வேண்டும்.
இது தான் யதார்த்தம், இது தான் நாம் இனத்தை காப்பாற்றுவதற்கான வழி. இவ் அடிப்படையின் மத்தியிலேயே, ராஜபக்சவை மீண்டும் ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்ற கருத்தை முன்னுக்கு வைத்தேன். என்னால் முன்வைக்கப்பட்ட கருத்து மிகவும் சரியானது என்பதை, கடந்த ஒருவருடமாக நடைபெற்று வரும் நல்லாட்சி இன்று நிரூபித்துள்ளது.
சில்லறை விடயங்கள்
கடந்த ஒரு வருடத்திற்குள் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எவற்றை திருப்திகாரமாக பெற்றுள்ளார்கள் என்பதை அறிவதனால், வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்கள், புள்ளி விபரங்களுடன் சுதந்திரமாக தமது கருத்துக்ளை மக்களுக்கு கூற வேண்டும்.
இவ்வேளையில் இந்தியாவும், மேற்கு நாடுகளும் தாம் விரும்பிய ஆட்சி மாற்றம் மூலம் தமிழ் மக்களிற்கு எவ்வளவு தீங்குகள் செய்துள்ளது என்பது வெளிப்படையாகும்.
ஆறு தசாப்தங்களிற்கு மேலான அரசியல் போராட்டம், முப்பது வருடங்களான ஆயுதப் போராட்டத்தை நடாத்திய தமிழ் மக்கள், சில்லறை விடயங்களையும் சில்லறை சலுகைகளையும் பெற்று கொள்வதற்கு அல்ல.
சிலர் வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிவிலியன் ஆளுநரையும், தொல்லைகள் தொந்தரவுகள் குறைந்துள்ளதாகவும், கொழும்பு யாழ்ப்பாணத்திற்கான பிரயாணம் தற்பொழுது கஸ்ரங்கள் இன்றி சுமூகமாக நடைபெறுவதாகவும், புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் பலருடைய பெயர்கள் தடை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்களை பெரிய விடயமாக கொள்கின்றனர்.
வடக்கு கிழக்கு வாழ் மக்கள் ஏற்கனவே தமது உறவினர், உற்றார், நண்பர்களை, தமது நிலம் சொத்துக்கள், சுய கௌரவம், நிம்மதியான வாழ்க்கையை ஆகியவற்றை ஏற்கனவே இழந்துள்ளார்கள்.
ஆகையால் இதற்கு மேலால் அவர்களிடம் இழப்பதற்கு மேலும் ஒன்றும் இல்லையானாலும், மேலும் சில கஸ்டங்களையும், தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவ் மக்களிற்கு இது ஓர் பெரிய விடயம் அல்ல.
வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிவிலியன் ஆளுநரின் மற்றைய முகத்தை மக்களுக்கு எடுத்து காட்டப்பட்டவை யாவும், இன்று அவருடைய அறிக்கைகள் வேலை திட்டங்கள் மூலம் மக்கள் காணுகிறார்கள். இவ் சிவில் ஆளுநருக்கும், இராணுவ அளுநருக்கும் இடையில் மக்கள் என்ன வித்தியாசத்தை கண்டுள்ளனர்?
வடக்கு நியமிக்கப்பட்டுள்ள சிவிலியன் ஆளுநர், ஜனாதிபதி சிறிசேனவின் தெரிவு அல்ல! இவர் ஏற்கனவே ராஜபக்சவினால் இராணுவ ஆளுநரின் பதவிக்கு நியமிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டவர்.
இவ் வேளையில், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தினால், இவரது நியமனம் கால தமாதமாகியிருந்தது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இராணுவ ஆளுநர் ராஜினமா செய்துள்ள காரணத்தினலேயே, இவர் ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். ஆகையால் இவ் ஆளுநர் விடயத்தை ஓர் மாபெரும் வெற்றிய யாரும் கொள்வது ஓர் மிலேச்சதனத்திற்கு ஒப்பானது.
இன்றைய சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் சகல விடயங்களும் சர்வதேச சமூதாயத்திற்கான கண்துடைப்பு என்பதே உண்மை. வடக்கு கிழக்கு வாழ் மக்களும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி என கூறப்படும் இன்றைய சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளையிட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
உதாரணத்திற்கு, சிறிலங்காவின் நீதி அமைச்சரின் கருத்திற்கு அமைய, தாம் ஒருபொழுதும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறார். அப்படியானால், நீதி துறையின் சுதந்திரம், மற்றைய நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தாம் தலையீடு செய்ய மாட்டோமென கூறிய நல்லாட்சி இது தானா?
நல்லாட்சி, தேசிய அரசாங்கம் என கூறும் அரசாங்கத்தில், வடக்கு கிழக்கில் உள்ள முக்கிய தமிழ் கட்சிகள் ஏதும் பங்களிக்கின்றனாவா?
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ராஜபக்சவின் ஆட்சியில் - வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள், புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் போன்றோரை பிரித்து ஆளப்பட்டாளர்கள் என்பது உண்மை.
ஆனால் தற்போதைய அரசாங்கம், இவற்றிற்கு மேலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை மிகவும் வெற்றிகரமாக சின்னபின்னமாக்கியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள், அங்கத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு இடையில் மாபெரும் சிக்கல் உருவாக்கப்பட்டு மிகவும் அபாயகரமான நிலை ஒன்று உருவாக்ககப்பட்டுள்ளது. இதற்காகவா வடக்கு கிழக்கு வாழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள்?
புலம் பெயர்வாழ் தனிநபர்கள், அமைப்புக்களின் தடை நீக்கம் என்பது ஓர் சுவராசியமான பகிடியாகவுள்ளது. என்னை பொறுத்தவரையில், தனிநபர்கள், அமைப்புக்களின் தடை அமுலில் இருந்த வேளையில் சர்வதேச மட்டத்தில் மிகவும் திறமையான ஓர் பரப்புரை வேலை நடைபெற்றது.
இதை மிகவும் அவதானமாக கவனித்த தற்போதைய அரசாங்கம், ஓரு கல்லில் இரு காய்களை பெற்றுள்ளது. பட்டியலிருந்து சிலரது தடை நீக்கம் என்பது சர்வதேச பிரச்சார வேலைகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை புலம் பெயர் வாழ் மக்களிடையே ஓர் பிரித்தாளும் திட்டத்தை மிகவும் திறமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இவர்களில் பலரது பெயர்கள் பட்டியலிருந்து நீக்கப்படும் என கூறிய பொழுது, இவர்கள் நிச்சயம் சில புதிய பெயர்களையும் இப்பட்டியலில் மேலதிகமாக இணைப்பார்களென முன் கூட்டியே கூறியிருந்தேன். இவை என்னால் ஊகம் கூறப்பட்டது போல் பட்டியலில் புதிய பெயர்கள் இணைக்கபட்டுள்ளது.
நிச்சயமாக எனது பெயர் இவ் பட்டியலில் இல்லை! இதற்காக எந்தவொரு சிறிலங்கா அரசிற்கு நன்றி கூற வேண்டிய கடமைப்பாடு எனக்கு இல்லை.
காரணம் எனது பெயர் கோத்தபாயவின் கொலை பட்டியலில் உள்ளதாக நம்பிக்கைக்குரியவர் என்னிடம் கூறினார்கள். இவ் புதிய பட்டியலில் இணைக்கப்பட்ட பெயர்களில் எனது பெயரை இணைப்பதற்கு வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவும், ஜெனிவா, பிரித்தானியா, லீபியாவில் வெளிநாட்டின் பிரதிநிதிகளாக பணி புரிந்தவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்ததாகவும்,
1990ம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை செயல் திட்டங்களில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வரும் காரணத்தினால், இவர்களால் என்னை இவ் பட்டியல்களில் இணைக்க முடியவில்லையென நம்பிக்கைகுரிய வட்டாரங்களிலிருந்து அறிய முடிந்தது.
மிகவும் வேடிக்கையான விடயம் என்னவெனில்,
அண்மையில் பட்டியலிருந்து நீக்கப்பட்ட சிலர், சிறிலங்கா அரசிற்கு நன்றி கூறியது. இங்கு தான் சிறிலங்கா அரசின் பிரித்தாளும் தத்துவம் மிக சிறப்பாக நிறைவேறியுள்ளது.
சிறிலங்காவின் ஜனாதிபதி சிறிசேன, மங்கள சமரவீர ஆகியோரின் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த விருந்தோம்பல்களுக்கு இவர்கள் எப்படியா நன்றியற்றவர்களாக இருக்க முடியும்?
இவர்களில் சிலர், இறைவனுடன் நெருங்கியவர்களென்ற எமது கணிப்பு மிகவும் தவறானது. உண்மையில் இவர்கள் ‘சாத்தனுடனேயே’ உள்ளார்கள். இவர்கள் தனிப்பட்டவர்களுடைய தகவல்களை நல்லவர்கள் போல் நடித்து பெற்று, தங்கள் திட்டங்கள் செயற்பாடுகளுக்கு குறிக்கப்பட்டவர்கள் இணைய மறுக்கும் கட்டத்தில் மிரட்டல்காளக பாவிக்கிறார்கள். இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
சர்வதேச அழுத்தம்
மிக அண்மையில், ஐ.நா.பாதுகாப்பு சபையின் அமெரிக்கா பிரதிநிதி திருமதி சமந்தா பவர், அமெரிக்காவின் அரசியல் விடயங்களிற்கான செயலாளர், திரு தோமஸ் சனோன் ஆகியோர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
அத்துடன் இன்னும் ஓர் இரு மாதங்களில், ஐ. நா. செயலாளர் நாயகம் திரு பன் கீ மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திரு குசேயின் ஆகியோர் சிறிலங்காவிற்கு செல்வதற்கு உள்ளார்கள்.
இவர்கள் யாவரும், நல்லட்சியென கூறப்படும் தற்போதைய சிறிலங்கா அரசு, நிச்சயம் ஐ.நா.மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்ட்ட பிரேரணையில் எவற்றை நிறைவேற்றாது, காலம் கடந்தும் கபட திட்டங்களை கண்டு திகைத்துள்ளார்கள்.
இதன் காரணமாகவே சிறிலங்காவிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே சிறிலங்கா செல்கிறார்கள் என்பதே உண்மை. சர்வதேச அழுத்தங்கள் சிறிலங்கா மீது தொடரட்டும்.
நல்லாட்சி என கூறப்படும் தேசிய அரசை திரைமறைவிலிருந்து உருவாக்கிய, முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமரதுங்காவின் அண்மை கால அறிக்கைக்கு அமைய, சிறிலங்காவில் நடைபெறவுள்ள நல்லாட்சிக்கு, சர்வதேச தொழில்நுட்ப ஆலோசனைகள் மட்டுமே பெற்று கொள்ளப்படுமெனவும், அங்கு எந்த வெளிநாட்டு நீதிபதிகளும் இடம்பெற மாட்டார்களென மிக ஆணித்தரமாக கூறியுள்ளார்.
சிறிலங்காவின் விடயங்களை மிகவும் அவதானமாக கவனித்து வருபவர்களுக்கு இது ஒரு அதிசயம் தரும் விடயம் அல்லா. இப்படியாகவே 1948ம் ஆண்டு முதல், வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களக்கு கூறுவது ஒன்று, செய்வது வேறு ஒன்றாக ஏமாற்றிவருகிறார்கள்.
போர்க்குற்ற விசாரணை பற்றி தற்பொழுது சிறிலங்காவினால் கூறப்படுவதும், நடைமுறைபடுத்த இருப்பதற்கும், ஐ.நா. மனித உரிமை சபையினால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எந்தவித தொடர்போ, சம்பந்தமோ அறவே கிடையாது.
ஆகையால் இவ்விடயங்களில் இவ் தீர்மானத்தின் பிரதான அனுசரணையாளர்களான – அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரநீகிரோ, மசிடொனிய ஆகியோர், சிறிலங்காவில் பாதிக்கப்பட்டு நியாயமான நீதியை எதிர்பார்த்து நிற்பவர்களிற்கு பதில் கூற கடமைபட்டுள்ளார்கள்.
உண்மை என்னவெனில், இப்படியான நடவடிக்கைகள் மூலம், சிறிலங்கா சர்வதேசத்தின் நாடி பிடிப்பை பரிசோதிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவ் விடயத்தில் எத்தனை ஐ.நா.மனித உரிமை சபையின் அங்கத்தவர்கள், எந்தனை சர்வதேச அமைப்புக்கள் எதிர்கிறார்கள், கேள்விகள் கேட்கிறார்கள் என்பதை அவதானித்தே சிறிலங்காவின் அடுத்த கட்ட நகர்வு ஆரம்பமாகும்.
கடந்த ஓக்டொபர் மாதம் என்னால் எழுதப்பட்ட, “சிறிலங்கா உடன்படிக்கைகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை” என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தேன்.
“கடந்த ஐ.நா. மனித உரிமை சபையின் தீர்மானத்தின் பின்னர் சிறிலங்காவின் நடவடிக்கைகளை அவதானிக்கும் இடத்தில், சிறிலங்கா அவ் தீர்மானத்தின் முக்கிய விடயங்களை நடைமுறைபடுத்தாது அலட்சியம் பண்ணுவதற்கான இரகசியமான புரிந்துணர்வுகளையோ, அனுமதிகளையோ பிரதான அனுசரணையாளர்கள், இந்தியா ஆகிய நாடுகளுடன் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவற்றின் உண்மைதன்மை நாம் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நிட்சயம் அறிவோம்” என கூறியிருந்தேன்.
ஆனால் அவை யாவும் தற்பொழுதே சந்திரிக்கா குமரதுங்காவின் அண்மை கால அறிக்கையுடன் மிக தெளிவாகியுள்ளது.
தளர்வு படுத்தப்படுகிறது
எம்மை பொறுத்தவரையில் நாம் மிக நீண்ட காலமாக சிறிலங்காவில் ஓர் சர்வதேச விசாரணையை வேண்டி நிற்பவர்கள்.
இவ் விடயம், 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் மிகவும் கடுமையாக அழுத்தப்பட்டது. ஆனால் சர்வதேச விசாரணை என்பது காலப்போக்கில் ‘கலப்பு விசாரணையாக’ மாற்றப்பட்டு, அடுத்து உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளும் வழங்கறிஞர்களும் வழங்கு தொடுனர்களும் இடம் பெறலாமென ஏற்றுக் கொள்ப்பட்டது.
ஆனால் இன்று முழுக்க உள்நாட்டு விசாரணயாக மற்றப்பட்டது மட்டுமல்லாது, கூடிய விரைவில் தமிழீழ விடுதலை புலிகளே சிறிலங்காவில் போர்க்குற்றத்தை மீறியுள்ளார்கள் என்ற பிரகடனப்படுத்தும் கட்டத்திற்கு நகர்த்ப்பட்டுள்ளது.
இவை யாவும் சிறிலங்காவில் நல்லாட்சி செய்யப்படுவதாக கூறப்படும் தற்போதைய அரசின் நிலைப்பாடு. மிக நல்லது. இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு 1948ம் ஆண்டு முதல் கைவந்த கலை. அவர்கள் விரும்பியபடி தம்மை திருப்திபடுத்த கூடிய வகையில், எந்த உள்ளநாட்டு விசாரணையையும் செய்து முடிக்கலாம்.
ஆனால் இலங்கைத்தீவில், விசேடமாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் யாவரும், இவ் உள்நாட்டு விசாரணையும் முற்றுமுழுதாக புறக்கணிக்க வேண்டும்.
ஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்காவின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அமையாத சகல விசாரணைகளையும் பதிக்கப்பட்டவர்கள் ஒத்துமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.
இவ் புறக்கணிப்பு என்பது – சர்வதேச சமூதாயம், சர்வதேச அமைப்புகளின் முற்று முழதான ஆதரவுடன், சகல தமிழ் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும் சிவில் சமூதாயதத்தின் அனுசரணையுடன் இவ் புறக்கணிப்பு இடம்பெற வேண்டும்.
தெற்கின் உள்ள சிவில் சமூதாயத்தில், பௌத்த பேரினத்தை ஆதரிக்கும், பணத்திற்கு வேலை திட்டங்களை மேற்கொள்வோர் காணப்படுவதனால், நாம் தெற்கின் சிவில் சமூதாயத்தை நம்பி இவ் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
முற்று முழுதான உள்நாட்டு விசாரணையை பாதிக்கப்பட்டோர் புறக்கணிப்பது என்பதில் எந்தவித வேறு கருத்துக்களை பின் தள்ளிவிட்டு, யாவரும் புறக்கணிப்பில் ஈடுபடவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும், மசவாசன திட்டங்களை கொண்ட நடைபெறவிருக்கும் உள்நாட்டு விசாரணை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் எந்தவித நீதியும் கிடைக்க போவதில்லை.
ஆகையால் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்து வாழ்க்கை முழுவதும் கவலைப்படாது, இவ் புறக்ணிப்பிற்கு திட்டமிடுங்கள். இதை செய்ய தவறும் பாதிக்ப்பட்டோர், நிட்சயம் வாழ்க்கை முழுவதும் கவலைப்பட வேண்டிய நிலைமை ஏற்படும். இவ் புறக்கணிப்பிற்கு, சிறிலங்காவில் ஓர் நியாயமான நீதியை விரும்பும் சகலரும் ஆதரிப்பதற்கு முன்வரவேண்டும்.
நல்லாட்சி செய்வதாக சர்வதேசத்திற்கு பரப்புரையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசு, தமது உள்நாட்டு விசாரணை மூலம், ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்தும், பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியும், வேறுபட்ட போர்குற்றங்களை மன்னிப்புடன் மேற் கொண்ட தமது யுத்தத்தின் கதாநாயகர்களென கூறப்படுபவர்களை காப்பாற்ற போகிறார்களாம்.
சிறிலங்க அரசு, சில பலம்வாய்ந்த நாடுகளின் உதவியுடன் தமது யுத்தத்தின் கதாநாயகர்களை காப்பாற்ற போகிறார்களாம். தேர்தல் காலங்களில் தெற்கில் உள்ள மக்களிற்கு கொடுக்கபட்ட வாக்குறுதிகளை தற்போதைய ஆட்சியாளார்கள் நிறைவேற்ற போகிறார்களாம்.
இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவெனில், தேர்தல் காலங்களில், இன்று அமைச்சர் பதவிவாகிக்கும் சிலர், “ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாரோ இல்லையோ, நாம் இவர்களை போர்க்குற்ற விசாரணை கூண்டில் நிறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோமென கங்கணம் கட்டியுள்ளனர்.
சிறிலங்கா அரசின் இவ் அசிங்கமான செயற்பாடுகளை சர்வதேச சமுதாயம் நிச்சயம் கவனத்தில் கொள்ளுமென நம்புகிறேன்.
திரிவுபடுத்தப்பட்ட உள்நாட்டு விசாரணை
நாங்கள் உள்நாட்டு விசாரணையை பகிஸ்கரிக்கப்பட வேண்டுமென கூறும் வேளையில், சிலர் சிலவேளைகளில், பாதிக்கப்பட்டவர்கள் தாம் தமது உற்றார் உறவினர்கள் நண்பர்களிற்கு நடந்தவற்றை, கண்டவற்றை சாட்சியாக உள்நாட்டு விசாரணையில் கூறுவதில் தவறில்லையென விவாதிடலாம்.
உண்மையை கூறுவதனால், திரிவுபடுத்தப்பட்ட எந்த உள்நாட்டு விசாரணையிலும் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டாலும், சிறிலங்கா இவற்றை தமக்கு சார்பாக பயன்படுத்தியே தீருவார்கள்.
உண்மையில், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது உற்றார் உறவினார்கள் கடந்த ஆறு வருடங்களில் தாராளமாக தமது நிலைபாட்டை பல இடங்களிற்கு ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.
ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபொழுது இப்படியான கண்துடைப்பு உள்நாட்டு விசாரணைகளை முன் தோன்றி மீண்டும் ஏமாற்றப்படாது தம்மை பார்த்து கொள்வது அவர்களது கடமை.
தற்போதைய நிலையில், உள்நாட்டு விசாரணையை பகிஸ்கரிப்பதற்கு மேலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு எந்த கடமையும் யதார்த்த ரீதியாக இருக்க முடியாது.
முள்ளிவாய்க்களிற்கு முன்பு நடைபெற்ற பல கொலைகள், காணாமல் போனோர் விடயத்தில் இன்று வரை எந்தவித நீதி தமிழ் மக்களிற்கு கிடைத்ததே கிடையாது.
உதாரணத்திற்கு – கிழக்கு மாகாணத்தில் வந்தாறுமூலை, சத்துருக் கொண்டான், கொக்கட்டிச் சோலை, மயிலந்தனை, குமரபுரம் போன்ற இடங்களில் நடைபெற்ற படுகொலைகளிற்கோ,
யாழில் நவாலி சென் பீற்றேஸ் தேவலாயத்தில் நடைபெற்ற படுகொலை, கொழும்பில் படுகொலை செய்யப்பட்டு போல்கொட வாவியில் விசப்பட்ட தமிழர்களது உடல்களிற்கும், வடக்கு கிழக்கில் காணமல் போனோர்,
விசேடமாக யாழ்ப்பாணத்தில் செம்மணியில் புதைக்கப்பட்ட 600 மேற்பட்டோர் பற்றிய எந்த குற்றங்களும் இன்றுவரை விசாரிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழர்கள் மீண்டும் மீண்டும் எதற்காக ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை நாம் மிகவும் கவனமாக ஆராய்வோமானால், இதற்கு முக்கிய காரணம், இறுதியாக நடைபெற்று ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தமது வாக்கு பலத்தை சரியான முறையில் பாவிக்கவில்லை என்பதே உண்மை.
இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போதைய ஜனாதிபதியான சிறிசேனவிற்கு தமது வாக்குளை அளித்தார்கள். இதன் பலனாக தமக்கு ஏற்கனவே இருந்துள்ள சர்வதேச ஆதரவையும் ஆட்சி மாற்றம் மூலம் இழந்துள்ளார்கள் என்பதே யதார்த்தம்.
இன்று பல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினார்கள், நடைபெற்று வரும் பாராளுமன்ற அமர்வுகளில் ஊளையிடுகிறார்கள். கடந்த ஆறு தசாப்தங்களையும் இவர்கள் கவனத்தில் கொண்டிருந்தால் இவர்களது இன்று மீண்டும் பாராளுமன்ற யாரும் கேட்பார் அற்று ஊளையிட வேண்டிய அவசியமில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினார்கள் சரியாக ஒரு வருடத்தின் பின்னார், இன்று தான் தங்களை தற்போதைய சிறிலங்கா தங்களை அரசு ஏமாற்றியுள்ளதை உணார்கிறார்கள்.
இவ் நிலையில் எதற்காக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தொடர்ந்த இவ் ஏமாற்று அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்?
நாம் உண்மை கதைப்போமானால், முன்னைய ராஜபக்ச அரசிற்கு வக்காளத்து வாங்கிய சகலரும் தற்போதைய அரசில் - ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களென வேறுபட்ட பதவிகiவகிக்கின்றனர்.
இப்படியாக ராஜபக்சவின் கொடூர ஆட்சிக்கு துணை போனவர்கள், தற்போதைய ஆட்சியில், தமிழ் மக்களிற்கு உரிய அரசியல் உரிமைகளையும், இவர்களிற்கு இழைக்கப்பட் போர்க்குற்றங்களிற்கு நியாயம் நீதி காணப் போகிறார்களா? இங்கு யார் யாரை மடையர்களாக கணிக்கிறார்கள்.
தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுநர்களை ஆகியோரை என்று தமது உள்நாட்டு விசாணையில் உள்ளடக்குகின்றார்களோ அல்லது இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைக்க விரும்புகிறார்களோ, அன்று தான் தற்போதைய தேசிய அரசாங்கத்தின் இறுதி நாளாக இருக்க முடியும்.
அன்று தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் எந்தவித பெரும்பான்மையும் இன்றி, தாம் தொடர்ந்து பதவியிலிருப்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை நடுவார்கள்.
இவ்வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சரியாக நகர்த்தாத கட்டத்தில், மீண்டும் தமிழர்கள் ஏமாற்றப்படுவார்கள். ஆகையால் சத்வீகமான அரசியல் தீர்வு,
இழைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்களிற்கான நீதி போன்றவற்றை தமது அரசியல் நிபந்தனைகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைப்பதன் மூலமே, தமிழ் மக்கள் இலங்கை தீவில் சமஉரிமை பெற்ற பிரஜைகளாக வழ முடியும்.
இவை யாவும் சாத்வீகமாகாத கட்டத்தில், ஓர் புதிய தேர்தலை தற்போதைய அரசு எதிர்கொள்வதன் மூலம், அமெரிக்கா, இந்தியா போன்றவர்கள் - தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வுடன், போர்க்குற்ற விசாரணையினையும் ஓர் ஒழுங்கான முறையில் மேற்கொள்ள முன் வருவார்கள்.
என்னால் கூறப்பட்ட பல ஆருடங்கள் என்றும் பிழைத்தது கிடையாது. கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பம் கொடி கட்டி பறந்து, சிறிலங்காவின் ஓர் முடிக்குரிய ஆட்சியாளர் போல் காண்பித்த வேளையில், என்னால் 2010ம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 24ம் திகதி, “கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறை வரை” (தெற்கிலிருந்து வடக்கு வரை) என்று ஓர் கட்டுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டது.
இக்கட்டுரையில் என்னால் எழுதப்பட்டதாவது, “எமது அனுபவத்தில் பல ஜனதிபதிகளும், பிரதமர்களும், அமைச்சர்களும், சேர் ஐசாக் நியூட்டனின் தத்துவத்திற்குள் ஆக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, ஒவ்வொரு செயலிற்கும் மறுதலிப்பு உள்ளது என்பதுடன், புவியீர்ப்பு சக்தி காரணமாக மேலே போகின்றவர்கள் யாவும் கீழே வந்தாக வேண்டுமெனவும், சிறிலங்காவில் ராஜபக்சக்களால் என்ன முடியுமென கூறியிருந்தேன். இன்று ராஜபக்சவின் குடும்பம் எங்கு, என்ன செய்கிறார்கள் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
இறுதியாக, ராஜபக்சக்களினால் ஒரே முகபாவனையை கொண்டவர்களை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள், உதரணத்திற்கு, தற்போதைய ஜனாதிபதி போன்ற ஒருவரை கண்பிடித்து அவரை அரங்கேற்றினார்கள்.
இவ் அடிப்டையில் இவர்களை பார்த்து உலகம், இவர்களது கபடம் நிறைந்த செயற்பாடுகளை கண்டு சிரித்து ஏளனம் செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யாதார்த்தம்.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்