யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் இன்று இடம்பெற்ற சுனாமி நினைவு நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்ட சிங்கள தேசியத கீதத்திற்கு மூச்சுப்பேச்சின்றி மரியாதை செலுத்தியுள்ளனர் தமிழ் அரசியல்வாதிகள். ஆரம்பத்தில் இலங்கை தேசிய கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து இசைக்கப்பட்ட இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் ஒலிபரப்பப்பட்டது. தமிழ் நிகழ்வுகளில் இலங்னை தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள் முழங்கி தள்ளிய காலம் போய் அவர்களே சிங்கள மொழி தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த எழுந்து நின்றமை அனைவரதும் வியப்பிற்குள்ளானது.

இழப்புக்களை இழந்தவர்கள் வேதனையில் துடிக்க, அதனை தமது பிரச்சார மேடையாக்க தமிழ் அரசியல் தலைவர்கள் போட்டிபோடுவது கேலிக்குரியதாக இருந்தது.
வருகை தந்திருந்த சுமந்திரன் இலங்கையின் தேசிய கீதத்திற்கு அஞ்சலி செலுத்துவது அதிசயமில்லாத போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்மினி சிதம்பரநாதன்,வடமாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,சுகிர்தன் போன்றோரும் பயபக்தியுடன் மரியாதை செலுத்தியதே வந்திருந்த மக்களிடையே வெறும் வாய்ச்சொல் வீரர்களாவென்ற கேள்வியை எழுப்பியிருந்தது.