வரவு செலவுத்திட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களை பாதிக்கும் முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த வாரம் வங்கி ஊழியர் சங்கம் அடையாள வேலை நிறுத்தமொன்றை முன்னெடுத்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பாதகமான முறையில் முன்மொழியப்பட்டிருந்த ஒருமில்லியனுக்கு அதிகமான பணம் மீளெடுப்பின்போது வரி அறவிடல் மற்றும் லீசிங் சேவை ரத்து ஆகியவை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது.
எனினும் குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச வங்கிகளின் ஊழியர்களை அரசாங்கம் தற்போது பழிவாங்கிக் கொண்டிருப்பதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னின்று செயற்பட்ட சுமார் 50 பேர் வரை தற்போதைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கி ஊழியர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.